| பண்பு தரவந்த வென்றொடர் நோய் (1) வேது கொள்வது போலுங் (2) கடும்பகன் ஞாயிறே யெல்லாக் கதிரும் பரப்பிப் பகலொடு செல்லாது 1நின்றீயல் வேண்டுவன னீசெல்லிற் (3) புல்லென் மருண்மாலைப் போழ்தின்று வந்தென்னைக் கொல்லாது போத லரிதா லதனொடியான் செல்லாது நிற்ற லிலேன் | 32 | ஒல்லையெங், காதலர்க் கொண்டு கடலூர்ந்து காலைநாட் போதரிற் (4) காண்குவேன் மன்னோ பனியொடு மாலைப் பகைதாங்கி 2யான் இனியனென், றேம்படுப்பன் ஞாயி றினி |
எ - து: அங்ஙனங் கூறி, மீண்டும் அவ்வூரிலுள்ளாரை நோக்கி, ஊரிலுள்ளீர்! இக்கடும்பகல் எமக்கு எங்கண் (5) ணுறக்கத்தைக் கைக்கொண்டு எம்மை நினையாத காதலையுடையவன் என்னிடத்துச் செய்த குணங்கள் தருகையினாலே வந்த என்னுடைய இடையறாத நோயான் வருங் குளிரை 3வேது கொள்வது போலே இராநின்றது: இது நுமக்கு என்போலே இருக்கின்றது 4கூறுமினென்றாள்; அங்ஙனங் கூறி, இங்ஙனம் வேதுகொண்டு என்னைக் காக்குங் 5கடும்பகல் ஞாயிறே! நீ எல்லாக் கதிர்களையும் பரப்பி இப்பகற் பொழுதோடே போகாது நிற்றலை விரும்பாநின்றேன்; அதற்குக் காரணம் என்னெனில், நீ போகிற் புற்கென்ற மயக்கத்தைத் தரும் மாலைக்காலம் இன்று வந்து என்னைக்கொல்லாமற்போத லரிது; அதனோடே யான் உயிர் போகாநிற்குந் தன்மையையுடையேனல்லேன்; ஆதலாற் 6காணென்றாள்; என்று பின்னும் ஞாயிறே! நீ எங்காதலரை விரையக் கொண்டு கடன்மேலே வந்து நாட்காலையிலே இவ்வுலகிலே போதுவாயாயின், யான், என்னோயின் நடுக்கத்தோடே மாலையாகிய பகையையும் பொறுத்து, நின்னிடத்து அவன் இனியன்; அவனை நீ துனித்திராதேகொள்ளென
1. “வேதுகொண் டொற்றியே” கலிங்க. கடை. 13. 2. கடியென்னு முரிச்சொல் விளக்கமென்னுங் குறிப்புணர்த்தி வருதற்கு, "கடும்பகன் ஞாயிறு” என்பது நச். உரையிலும் “கடும்பகல்” என்பது சேனா. உரையிலும் மேற்கோள்; தொல். உரிச். சூ. 87. 3. “புன்கண்ணை வாழி மருண்மாலை யெங்கேள்போல், வன்கண்ண தோ நின்றுணை” குறள். 1222. 4. ‘காண்குவேன் கொல்லோ’ என்று உரையிலுள்ளது. 5. இந்நூற்பக்கம் 156 : 3- ஆம் குறிப்புப் பார்க்க. (பிரதிபேதம்)1நின்றீதல் வேண்டு வேனீ செல்லிற், 2யான், எ - து, அங்ஙனங் கூறி, 3வேதுகோளது போலே, 4கூறுமினென்றாள், உம்மை யிசை நிறை, அங்ஙனங்கூறி, 5கடும்பகலையுடைய ஞாயிறே, 6காணேனென்றாள்.
|