பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்925

நெஞ்சினைப்பாதுகாப்பதுஞ் செய்வேன்; அங்ஙனம் பாதுகாத்துப் பின்னர் அவனைக் காண்பேன்கொல்லோ; என்று 1கூறினாள். எ - று. 

உம்மை, இசைநிறை. நின்றீயல், தொழிற்பெயர்த்திரி 2சொல். 

36ஒள்வளை யோடத் துறந்து துயர்செய்த
கள்வன்பாற் பட்டன் றொளித்தென்னை யுள்ளிப்
பெருங்கடல் புல்லெனக் கானல் புலம்ப
விருங்கழி (1) நெய்த லிதழ்பொதிந்து தோன்ற
விரிந்திலங்கு வெண்ணிலா வீசும் பொழுதினான்

 


1. நெய்தலென்பது ஒரு நீர்ப்பூங்கொடி; இதனானே கடல் சார்ந்த நிலம் நெய்தனிலமெனப்பட்ட தென்பார் ஒருசாரார். (தொல். அகத். சூ. 5. இள. நச். நாற்கவி. அகத். சூ. 6. உரைபார்க்க.) இக்கொடி திரண்ட தாளையும் பசிய இலையையும் நறுமணமுள்ள பூவையுமுடையது; இதன் இலை யானைக்கன்றின் காதிற்கும், இதன்முகிழ் மாணாக்கர்குடுமிக்கும், இதன் பூவிதழ் வேலுக்கும் உவமையாய் வந்துள்ளன. இதற்கு விடியற்காலத்தில் மலர்தலும் மாலைக்காலத்திற் குவிதலும் இயல்பாம். இம்மலரால் நெய்தனிலமகளிர் தழையும் மாலைமுதலியனவும் செய்தணிதலும் சிற்றில் முதலியவற்றுக்குப் புனைதலும் உண்டென்று பண்டைநூல்கள் கூறும். இம்மலரிற் கருநிறமுடைய சாதி கருநெய்தலென்றும் வெண்ணிற முடையசாதி வெண்ணெய்தலென்றும் வழங்கப்பெறும். இவற்றுட் கருநெய்தற் பூவுக்கு நீலமணியும் அதனிதழுக்கு மகளிர் கண்ணும் உவமையாக வருகின்றன. மகளிர் கண்ணுக்கு இவ்விதழும் உவமையாம். (இந் நூற்பக்கம் 893 : 1-ஆம் குறிப்புப் பார்க்க.) இவையும் பிறவும் (அ) “கணைக்கா னெய்தல்” பெரும்பா. 213; நற். 138 : 6; குறுந். 9; அகம். 360 : 4. (ஆ) “சிறுபாசடைய நெய்தல்” நற். 27 : 11. (இ) “கமழ்நறு நெய்தல்” நற். 283 : 2. (ஈ) "நெய்தல், கட்கமழ்ந் தானத் துறைவற்கு’’ ஐங். 151. (உ) "இரும்பிடி................நெய்தலம் பாசடை புரையு மஞ்செவிப் பைதலங்குழவி தழீஇ’’ நற். 47 : 1 - 4. (ஊ) "நெய்தன் முகிழ்த் துணைய வாங்குடுமி’’ சிறுபஞ்ச. 30. (எ) "நெய்த லிடையிடை வாளை பிறழ்வனபோ, லைதிலங் கெஃகி னவி ரொளிவா டாயினவே’’ களவழி. 33. (ஏ) "வைகறைக் கட்கமழ் நெய்த லூதி யெற்படக், கண்போன் மலர்ந்த காமர் சுனைமல, ரஞ்சிறை வண்டி னரிக்கண மொலிக்குங், குன்று’’ முருகு. 73-77. (ஐ) "வைகறை மலரு நெய்தல் போலத், தலைபெரி துடைய காதலி கண்ணே’’ ஐங்குறு. 188.

(பிரதிபேதம்)1கூறினாள் நின்றீயல், 2சொல். இனியனென்றோம்படுப்பன் ஞாயிறினி யொள்வளை.