பக்கம் எண் :

946கலித்தொகை

ஓகாரம், எதிர்மறை, பறாப்பருந்து, ஈண்டுக் (1) குருகென்பதனை உணர்த்தி நின்றது. மறாவரைசன், 1வரோதயனென்னும் பொருட்டு.(?)

48கையாறு செய்தானைக் காணிற் 2கலுழ்கண்ணாற்
(2) பையென நோக்குவேன் றாழ் (3) தானை பற்றுவே
னையங்கொண் டென்னை யறியான் 3விடுவனே
(4) லொய்யெனப் பூச லிடுவேன்மன் 4யானவனை
மெய்யாகக் கள்வனோ வென்று

 எ - து: அங்ஙனங் கூறி, இனி வருகின்ற இராக்காலத்து நின் அம்புகள் இறந்துபடுவியாமல் யான் உயிர்கொண்டிருக்கும்படி அருளுமாயின், அவசத்தாற் சிறிது துயிலேற்றுக் கலங்கின கண்ணாலே எனக்குக் கையாற்றைச் செய்தவனைக் கனவிலே கண்டேனாயின், அக்கண்ணைக் கடுக விழித்துப் பாராதே மெத் தெனப் பார்ப்பேன்; 5பார்த்தபின் தப்பிப்போகாதபடி தாழ்ந்து கிடந்த துகிலைப் பிடித்துக்கொள்வேன்; பிடித்துக்கொண்டு என் (5) மேனி வேறுபாட்டினைக் கண்டு இவள் நந்தலைவியோ 6அல்லளோ வென்று ஐயத்தை நெஞ்சிடத்தே கொண்டு என்னை அறியாதே கைவிடுவனாயின் என் (6) நாணமுதலிய குணங்களையும் மேனிநலத்தினையும் மெய்யாகக்கைக்கொண்டு 7போனகள்வனென்று எல்லாருங் கேட்கும்படி 8விரையக் கூப்பிடுவேன் என்று காமனை நோக்கிக் கூறினாள். எ - று.

ஒ, அசை.


1. குருகு - வளையல்.

2. "பையெனக் காண்கு விழிப்பயான் பற்றிய, கையுளே மாய்ந்தான் கரந்து’’ கலி. 142 : 35 - 36.

3. "அரிவே யுண்க ணவன்பெண்டிர் காணத், தாருந் தானையும் பற்றி’’ அகம். 276 : 8 - 9.

4. ஒய்யென வென்பது விரைய வென்னும் பொருளில் வருவதோர் இடைச்சொல்; கலி. 37 : 18, 121 : 9; சீவக. 800. 866. 952. 1833. 1838. இவற்றில், ‘ஒய்யென’ என்பதன் உரை நோக்குக.

5. "நெஞ்சம்....................தொன்னல னிழந்தவென் பொன்னிற நோக்கி, யேதி லாட்டி யிவளெனப், போயின்று கொல்லோ’’ நற். 56 : 5 - 10.

6. "உள்ளங் கொண்டா ரிவரென் றுணர்த்திடப், புள்ள வாங்கணை வேளிடைப் போதல்போ, லள்ளி லைச்செழுஞ் சோலையி லன்பரைக், கள்ளுண் கோதையர் கைப்பிடித் தேகினார்" நைடத. போதுகொய். 2.

(பிரதிபேதம்)1வரோதையன், 2கலிழ்கண், 3விடுவானேல், 4யான்றன்னை, 5அப்பார்த்தவன் தப்பி, 6அல்லவோ, 7போனவென கள்வன், 8விரைவாய்க்