| புதுத்திங்கட் கண்ணியான் பொற்பூண்ஞான் றன்னநின் கதுப்புலறுங் கவினையாய்க் காண்டலுங் காண்பவோ; ஆங்கு; | 20 | அரும்பெற லாதிரையா னணிபெற மலர்ந்த பெருந்தண் சண்பகம் போல வொருங்கவர் பொய்யா ராகுத றெளிந்தன மையீ ரோதி மடமொழி யோயே. |
இது பொருள்வயிற் பிரிந்த தலைவனை நினைந்து ஆற்றாத தலைவியைத் தோழி ஆற்றுவித்தது. இதன் பொருள். 1அயந்திகழ் நறுங் (1) கொன்றை யலங்கலந் தெரியலா 2னியங்கெயி லெயப்பிறந்த வெரிபோல வெவ்வாயுங் (2) கனைகதிர் தெறுதலிற் கடுத்தெழுந்த காம்புத்தீ மலைபரந்து தலைக்கொண்டு முழங்கிய முழங்கழன் மயங்கதர் மறுகலின் மலைதலைக் கொண்டென விசும்புற நிவந்தழலும் விலங்கரு வெஞ்சுரம் |
எ - து: நீர்நிலைக்கருகே விளங்குகின்ற அலங்கலையுடைய கொன்றை மாலையையுடைய (3) இறைவன் திரிபுரத்தை எய்கைனாலேதோன்றின முழங்கும் வெம்மையையுடைய நெருப்பு விசும்புற நிவந்து அழலுமாறு
1. (அ) "கண்ணி கார்நறுங் கொன்றை’’ புறம். 1 : 1; (ஆ) "கொன்றைத்தார் சுவற்புரள’’ கலி. 1 : 11. என்பவற்றால், கொன்றைப்பூ இறைவனுக்குக் கண்ணியும் தாருமாதல் அறியப்படும்; அஃதன்றி மாலையுமாதல் "கொன்றை யவன்’’ (கலி. 142 : 28) என்பதன் குறிப் பால் அறியலாகும்; (ஈ) "கார்விரி கொன்றைப் பொன்னேர் புதுமலர்த், தாரன் மாலையன் மலைந்த கண்ணியன்’’ (அகம். கடவுள்.) என மூன்றுமாகக் கூறப்படுதல்காண்க. 2. "கனைகதிர் தெறுதலால்’’ (கலி. 11 : 14) என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 3. "மட்டணிமூதூர் மனை தொறு மரீஇய, கட்டணிகூந்தற் கள்ள மங்கைய, ரட்டிலு மறையும் விட்டெரி கொளுவலி, னெட்டெனக் கூறிய திசை திசை தொறூஉ, மைந்தலை யுத்தி யரவுநா ணாக, மந்தர வில்லினந்தணன் விட்ட, தீவா யம்பு திரிதரு நகரி, னோவா தெழு மடங்குட்கு வரத் தோன்றி’ பெருங். (1) 43 : 115 - 121. (பிரதிபேதம்)1அலர்ந்திகழ. 2இலங்கெயில்.
|