பக்கம் எண் :

ஐந்தாவது நெய்தல்959

போல, செறிந்த கிரணங்களையுடைய ஞாயிறு எவ்வாயுஞ் சுடுகைனாலே முளிந்த (1) மூங்கில் தம்மிலே இழைதலைக் கொண்டதாக அதனிடத்தே கடுத்தெழுந்த முழங்கிய காட்டுத்தீ அவ்விடத்தைக் கைக்கொண்டு விசும்பிலே உறஒங்கி வெம்மையைச் 1செய்யும், (2) விலங்குகள் பலகாலுந் திரிகையினாலே மயங்கின அதரையுடைய, மலைகள் பரந்துகுறுக்கிட்டுக் கிடக்கும் போதற்கரியசுரத்தை. எ - று. 

செய்யுஞ்சுரம், அதரையுடையசுரம், போதற்கரியசுரம்; என்க.

விலங்கு, வருவிக்க. அலங்கலையுடைய கொன்றை என்றார், (3) தாராகப் பூத்தலின். அலங்கல், அசைவுமாம்.

7

இறந்துதா மெண்ணிய வெய்துதல் வேட்கையா
லறந்துறந் தாயிழா யாக்கத்திற் பிரிந்தவர் 


1. (அ) "ஞெவிக்ழை முழங்கழல் வயமா வெரூஉங், குன்றுடை யருஞ்சுரம்’’ (ஆ) "முளிவயிர்ப் பிறந்த வளிவளர் கூரெரிச், சுடர்விடு நெடுங்கொடி விடர்முகை முழங்கு, மின்னா வருஞ்சுரம்’’ ஐங்குறு. 307, 395. (இ) "கைப்பொருத வோசையாற் கண்ணுமிழ்ந்த செந்தீயான், மெய்ப்பொருது மீதெழுந்த வெம்புகையா - னைப்ப, வெதிர்வேங்கடுங்கானம் போன்றதே வெம்போ, ரெதிர்வேர்தர் செய்த விடம்’’ பாரதம். (ஈ) "வயிரமெனுங் கடுநெருப்பை மிகமூட்டி வளர்க்கினுயர் வரைக்கா டென்னச், செயிரமரில் வெகுளிபோரச் சேரவிரு திறத்தே முஞ் சென்று மாள்வோம்’’ வில்லி கிருட்டினன். 6.

2. (அ) "மாநிரை, மாஅல் யானை யொடு மறவர் மயங்கித், தூறதர் பட்ட வாறுமயங் கருஞ்சுரம்’’ கலி. 5 : 1 - 3. 
(ஆ) "மாமறுகலின் மயக்குற்றன வழி’’..................... (இ) "மானதர் மயங்கிய மலைமுதற் சிறுநெறி’’ நாற். சூ 191. மேற்கோள்.

3. (அ) "ஏதில பெய்ம்மழை காரென மயங்கிய, பேதையங் கொன்றைக் கோதைநிலை நோக்கி’’ (ஆ) "குறும்பல் கோதை கொன்றை மலர’’ ஐங்குறு. 462, 497. (இ) "நாண்மலர்க் கொன்றையும் பொலந்தார் போன்றன’’ பரி. 14:10. (ஈ) "பொன்போறார் கொன்றை புரிந்தன’’ திணைமாலை. 109. (உ) "தாரி னார்விரி கொன்றையாய்’’ (ஊ) "தொடைநவில் கொன்றையந் தாரினானும்’’ (எ) "தொடைமலி யதழியும்’’ (ஏ) "தொடைய லார்நறுங் கொன்றையான்’’ (ஐ) "தொடைநவில் கொன்றை யொடு’’ (ஒ) "தாரணி கொன்றையும்’’ (ஓ) "தாருறு கொன்றை தம்முடி வைத்த சைவனார்’’ (ஒள) "கணிவளர்தார்ப் பொன்னிதழிக் கமழ்தார் கொண்டார்’’ தேவாரம் (ஃ) "கொள்றைகண்மேற், றூங்குபொன் மாலைகளோடு’’ நாலாயிர. நாச்சியார். 9, 9.

(பிரதிபேதம்)1செய்யுஞ் சுரத்தையென்க மலைகள்பரந்து................போதற்கரியசுரம் விலங்குள்..................அதரையுடைய சுரம், விலங்குவருவிக்க.