(1) பிறங்குநீர் சடைக்கரந்தா னணியன்ன நின்னிறம் பசந்துநீ யினையையாய் 1நீத்தலு நீப்பவோ எ - து: ஆயிழாய்! தாம் எண்ணிய காரியங்களைப் பெறதலானுள்ள விருப்பத்தாலே அறத்தினைக் கைவிட்டு வெஞ்சுரத்தையிறந்து பிறங்குகின்ற நீரைச் சடையிலே மறைத்தவனை ஒத்த பொருளாக்கத்திலே பிரிந்தவர் அழகி னையுடைய நின்னிறம் பசந்து நீ இத்தன்மையையாக நின்னைக் கைவிடுதலுஞ் செய்வரோ? அங்ஙனஞ் செய்யார்க்காண். எ - று. (2) இறைவனை ஒத்தபொருள் என்றார், பொருள் நின்றுழிநில்லாது பல ரிடத்துஞ் சென்றதேனும் ஒன்றானும் தனக்குக் கேடின்றி யிருத்தலின். அணி - அழகு. 11 | கரிகாய்ந்த கவலைத்தாய்க் (3) கல்காய்ந்த காட்டகம் வெருவந்த வாறென்னார் விழுப்பொருட் ககன்றவ ருருவவேற் றூர்தியா 2னொள்ளணிநக் கன்னநின் 3னுருவிழந் தினையையா யுள்ளலு முள்ளுபவோ |
எ - து: வெந்த கரியினையுடைய பல வழியினையுடைத்தாய்க் கற்கள் காய்ந்த காட்டகத்தை வெருவுதல் வந்த வழியென்று கருதாராய் வடிவையுடைய ஏறாகிய ஊர்தியையுடையானை ஒத்த விழுப்பொருட்கு அகன்றவர் 4நக்கஒள்ளி தாகிய அணியினையுடைய நின்னுருவை இழந்து நீ 5இத்தன்மையையாக அப் பொருளையேநினைத்தலையுஞ் செய்வாரோ? அங்ஙனஞ் செய்யார் காண். எ - று. 6நக்கு என்னும் எச்சம் ஒள்ளிதாகிய என்னும் வினை கொண்டது.
1. "தேறுநீர் சடைக்கரந்து’’ கலி. 1 : 2. 2. "அருவிதாழ்ந்த’’ (புறம். 198 : 9) என்னும் செய்யுளில் ‘ஆலமர் கடவுளன்னநின்’ என்றதற்கு ஆலின்கீழமர்ந்த முக்கட் செல்வனாகிய கடவுளையொப்ப என்றும் நிலைபெற் றிருப்பேனென் றிருக்கின்ற நின் னென்று ரைப்பினுமமையும்’ என்று எழுதியிருக்கும் பின்னுரையும் "வீதலறியா விழுப்பொருள்’’ (கலி. 86 : 21) என்பதற்கு எழுதியிருக்கும் உரையும் ஈண்டு அறிதற் பாலன. 3. (அ) "மலை வெம்பிய போக்கரு வெஞ்சுரம்’’ (கலி. 8 : 6) என்பதும் (ஆ) "மலைவெம்ப’’ (கலி. 13 : 5) என்பதும் (இ) அதன்குறிப்பும் ஒப்பு நோக்கற் பாலன. (பிரதிபேதம்)1நீக்கலு நீக்கலோ, 2ஒண்ணக்க வளையனநின், 3வெருவிழந்து, 4நமக்கு ஒள்ளிதாகிய வளையினையுடைய, 5இத்தன்மையாக, 6நக்கஎன்னும்.
|