கொதித்துராய்க் குன்றிவர்ந்து (1) கொடிக்கொண்ட கோடையா லொதுக்கரிய நெறியென்னா ரொண்பொருட் ககன்றவர் (2) புதுத்திங்கட் கண்ணியான் பொற்பூண்ஞான் றன்னநின் 1கதுப்புலறுங் கவினையாய்க் காண்டலுங் காண்பவோ எ - து: ஞாயிறு கீழ்த்திசையிடத்து உதயகிரியிலே வந்து தோன்றிப் பின்பு கொதித்துப் பரந்து தான்கொண்ட கோடைக் காலத்தாலே போதற்கு அரிய வழியென்று கருதாராய்ப் புதிய திங்களாகிய கண்ணியையுடையானை யொத்த ஒள்ளியபொருட்கு அகன்றவர் பொன்னாற்செய்த தலைக்கோலங்கள் தாழ்ந்து விளங்கின நின்மயிர் அவ்வாறன்றிக் காய்கின்ற அழகை நீ யுடையையாக அப்பொருள் வேட்கையை மனத்தாற் காணுதலையுஞ் செய்வரோ? அங்ஙனஞ் செய்யார்காண். எ - று. ஆங்கு, அசை. 20 | அரும்பெற (3) லாதிரையா னணிபெற மலர்ந்த பெருந்தண் சண்பகம் போல வொருங்கவர் பொய்யா ராகுத றெளிந்தன மையீ ரோதி மடமொழி யோயே |
எ - து: கருமையினையும் நெய்ப்பினையுமுடைய 2ஒதியினையும் மடப் பத்தையுடைய மொழியினையுமுடையாய்! பெறுதற்கு அரிய ஆதிரை நாளை யுடைய (4) இறைவன் திருமேனி அழகைப்பெறும்படி மலர்ந்த பெரிய குளிர்ந்த இச்சண்பகம் பருவம்பெய்யாதவாறுபோல அவர் தாங் கூறிய பருவத்தைப் பொய்யாராய் வருதலை அவர் கூறிய கூற்றால் நீயும்யானும் ஒருங்கு தெளிந்தேம்; அங்ஙனந் தெளிந்த பருவங் கழிவதற்கு முன்னே
1. "கொடிமிசை மையறு மண்டிலம்’’ கலி. 141 : 11 - 12. 2. (அ) "திங்கட் புதுமுகிழ் சூடினாரே" தேவாரம். (ஆ) "குளிர் மதிக்கண்ணியாற்கு’’ சீவக. 208. (இ) "அந்நெடு வேணியிற் கண்ணியென விருந்து, தூற்றுமறு வொழிந்த வேற்றத் தானும்’’ கல். 23 : 32 - 33 (ஈ) "திங்கட் கண்ணி முழுமுதலை’’ கூர்ம. தக்கனைச். 19. (உ) "மாசறு மிளமதிக் கண்ண்ி வார்சடை, யீசன்மேல்’’ காசி. காசியின் சிறப்பு. 27. (ஊ) "திங்களங் கண்ணி யானை’’ சேது. சீதை குண்டச். 43. (எ) "ஆறாடிய வேணியின் மீமிசைமிக் கமிழ்தாடிய வெண்மதிக் கண்ணியனே’’ (ஏ) "நாண்மதிக் கண்ணி யார்தாம்’’ திருவானைக்காப். பராசரன். 41, கவுதமப். 63. (ஐ) "வனையு மாமதிக் கண்ணியான்’’ விநாயக. கணபதி. 14. (ஒ) "உருவவெண்டிங்கட் கண்ணி யொண் சுடர்க்கு’’ உத்தரகோச. ஐந்தெழுத்து. 16. 3. "பின்னரு, மாதிரையா னாதிரையா னென்றென் றயர்வுறுமா, லூர் திரைநீர் வேலி யுலகு’’ முத்தொள். கடவுள் வாழ்த்து. 4. "செண்பக மலரெனச் சிவந்த மேனியாள்" (பிரதிபேதம்)1கதுப்புலருங் கவினை, 2ஒதியினையுடைய மடப்பத்தை.
|