பக்கம் எண் :

962கலித்தொகை

வருவர்; அவர் மொழியைத் தெளிவாயாக என ஆற்றுவித்தாள். எ - று.

இது கைம்மிகலென்னும் மெய்ப்பாடு எய்திநின்ற தலைவிக்குப் பின்னர்ச் சூழ்ச்சி பிறந்தது.

(1) இஃது இளவேனிற் பருவங்குறித்து வற்புறுத்திப் பிரிய ஆற்றியிருந்து அப்பருவம் வந்தபின்னர் ஆற்றாளாய் இரங்குகின்ற தலைவியைத் தோழி ஆற்றுவித்தலான் இரக்கமாகிய உரிப்பொருள் சிறத்தலின், அவ்வுரிப்பொருள் முதலிலுங் கருவிலுஞ் சிறந்ததென்று இரக்கத்திற்கு உரிய நெய்தலிற் கோத்தார்; "முதல்கரு வுரிப்பொரு ளென்ற 1மூன்றி, னுவலுங் காலை முறைசிறந் தனவே, பாடலுட் பயின்றவை நாடுங் காலை’’ (2) என்றாராகலின். இது பாலைக்கு உரிய முதலுங் கருவும் 2வந்து அதற்கு உரிய உரிப்பொருள் சிறவாமல் நெய்தற்கு உரிய உரிப்பொருள் சிறந்ததாயிற்று.
இது தரவியல் ஒவ்வாது 3அதனகப்பட்டுவந்த சுரிதகத்தானிற்ற ஒத்தாழிசைக்கலி. (33)

"முல்லை 4குறிஞ்சி மருத நெய்தலெனச், சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’ (3)என்புழி, சொல்லாதமுறையாற் சொல்லவும் படுமென்ற லின் இத்தொகையைப் பாலை குறிஞ்சி மருதம் முல்லை நெய்தலென இம் முறையே 5கோத்தார் 6நவ்வந்துவனார்.

நெய்தற்கலி முற்றும்
கலித்தொகை முற்றும்.
நெய்தற்கு ஆசிரியன் பாரத்துவாசி
நச்சினார்க்கினியன் செய்த
உரை முற்றும்.


1. ‘’தினைமயக் குறுதலும்’’ ‘என்னுஞ் சூத்திரவுரையில் ‘ மயக்குறுதலும்’ என்றதனான் அவ்வவ நிலங்கட்கு உரிய முதலுங்கருவும் வந்து உரிப்பொருள் வேறாதலன்றி அவ்வந் நிலங்கட்கு உரித்தல்லாத முதலுங்கருவும் வந்து உரிபொருண் மயங்குவனவுங் கொள்க வென்றும், ‘தெய்வமுணாவே’ என்றுஞ்சூத்திரத்தினுரையில் ‘எந்நில மருங்கின். என்பதனால் பூவும் புள்ளும் வரைவின்றி மயங்கு மெனவே ஒழிந்த கருவும் மயங்கு மென்பது ‘சூத்திரத்துப் பொருளன்றியும்’ என்பதனான உரையிற் கொள்க வென்றும் கூறி இச்செய்யுளை மேற் கோள் காட்டினர் நச்சினார்க்கினியர்; தொல். அகத். சூ. 12; 18.

2. தொல். அகத். சூ. 3.

3. தொல். அகத். சூ. 5.

(பிரதிபேதம்) 1 மூன்றென, 2 வந்துபாலைக்குரிய, 3 அதள்கணகப்பட்டு, 4 குறுஞ்சி, 5 கோத்தார் கலித்தொகைக்கு ஆசிரியன்பார்த்துவாசி நச்சினார்க்கினி யான் செய்த உரைமுற்றும், 6நல்லந்துவனார்.