தமிழ் இணையக் கல்விக்கழகம் - TAMIL VIRTUAL ACADEMY

மொழிகள்

Kalithogai-உரைச் சிறப்புப் பாயிரம்


உரைச்சிறப்புப்பாயிரம்

பாற்கடல் போலப் பரந்த நன்னெறி
நூற்படு வான்பொரு ணுண்ணிதி 1னுணர்ந்து
போக்கறு கேள்விப் புலவோர் புலத்தி
னாற்பொருள் பொதிந்த தூக்கமை யாப்பினைத்
5.
2தேக்கிய சிந்தைய னாகிப் பாற்பட
வெழுத்துஞ் சொல்லும் பொருளுமிம் மூன்று
மிழுக்கற வாய்ந்த 3வழுக்கிறொல் சீர்த்தித்
தொல்காப் பியமெனுந் தொடுகடற் பரப்பை
மறுவுங் குறைவு மின்றி யென்றுங்
10.
கலையி னிறைந்த கதிர்மதி யென்ன
நிலையுடை கலத்தி னெடுங்கரை காணாக்
கல்லா மாந்தர் கற்பது வேண்டியு
நல்லறி வுடையோர் நயப்பது வேண்டியு
முரையிடை யிட்ட காண்டிகை யுரைத்தும்,
15. 
ஆன்றோர் 4புகழ்ந்த வறிவினிற் றெரிந்து
சான்றோ ருரைத்த தண்டமிழ்த் தெரிய
லொருபது பாட்டு 5முணர்பவர்க் கெல்லா
முரையற 6முழுதும் புரைபட வுரைத்தும்,
ஒலித்திரைத் தலத்தி னுணர்ந்தோ ருரைக்குங்
20. 
கலித்தொகைக் கருத்தினைக் காட்சியிற் கண்டதற்
குள்ளுறை யுவமமு மேனை யுவமமுந்
தெள்ளிதிற் றெரிந்து திணைப்பொருட் கேற்ப
வுள்ளுறை யுவமத் தொளித்த பொருளைக் 
கொள்பவர் கொள்ளக் குறிப்பறிந் துணர்த்தி
25. 
யிறைச்சிப் பொருளுக் கெய்தும் வகையைத்
திறப்படத் தெரிந்து சீர்பெறக் கொளீஇத்
துறைப்படு பொருளொடு சொற்பொருள் விளக்கி

(பிரதிபேதம்) 1உரைத்துப், 2தேர்ததமைச்சிந்தைய, 3வழுத்து தொல், 4புகழ வறிவினிற், 5உரைபபவாககெல்லாம், 6முழுதும் படைவுரு விததும்.


Tags   :

புதுப்பிக்கபட்ட நாள் : 04-09-2016 13:32:40(இந்திய நேரம்)