குன்றக னன்னாடன் வாய்மையிற் பொய்தோன்றிற் (1)றிங்களுட் டீத்தோன்றி யற்று எ - து: 1தன் சூளுறவினைப் பொய்யாக்குதற்கு உரியனோ? பொய்யாக்குதற்கு உரியனோ? 2நீ அஞ்சுதலைப் பரிகரியென்று தான் சொல்லப்பட்ட மகளிரைப் பாதுகாவாது விடுதற்கு உரியனோ? மலையகன்ற நன்னாட்டை யுடையவன் கூறிய மெய்யிலே பொய்தோன்றுமாயின், திங்களிடத்தே தீத்தோன்றின தன்மைத்து; அங்ஙனங் கூறாதேகொள்; 3எ -று. தேற்றுதற்கு இருகாற் 4கூறிப் பின்விசேடித்துக் கூறினாள். 25 | (2)இளமழை யாடு மிளமழை யாடு மிளமழை வைகலு மாடுமென் முன்கை வளைநெகிழ வாராதோன் குன்று |
எ - து: 5என் முன்கையில் வளை கழலும்படியாக என்னிடத்து வாராதவன் மலையாயிருந்தும் இளமழை உலாவாநிற்கும்; இளமழை உலாவாநிற்கும்; அது தான் ஒருகாலத்து உலாவுதலன்றி நாடோறும் உலாவா 6நிற்கும்; எ-று. கருத்தங்கி வந்து சூன்முதிர்தற்கு மலையில் (3) 7மேய்கின்ற மழை யென்பது தோன்ற இளமழை 8யென்றாள். இஃதென்ன வியப்போவெனப்பொருட்புறத்தே இறைச்சி 9தோன்றிற்று; இது தலைவிகூறியது. மேல், தோழி கூறுகின்றாள்.
1. "நகைக்கதிர்மதியம்வெய்தா நடுங்கச்சுட்டிடுதலுண்டே." சீவக, 2315. 2. (அ) "மந்திக்காதலன்முறிமேய்கடுவன், றண்கமழ்நறைக்கொடிகொண்டு வியலறைப், பொங்க லிளமழைபுடைக்குநாட" ஐங், 276: என்பதும் (ஆ) "மேற்கருக்கொண்டு முற்றிப் பயன்படுவதாய இளமுகிலை மந்தி நறைக்கொடி கொண்டு புடைக்கும் நாட’ என்னும் அதன்பழைய வுரையும் (இ) "ஆடிய லிளமழை சூடித் தோன்றும்,பழந்தூங்கு விடாகத்து" அகம், 271: 13 - 4. என்பதும் (ஈ) "கலங்கு தெண்டிரை மேய்ந்து கணமழை................விலங்கல் சேர்ந்து" என்பதும் (உ) ‘கணமழை.............திரையைப் பருகிச் சூன்முதிரு மளவும் மலையைச்சேர்ந்து’ என்னுமதனுரையும் (ஊ) "மாமலை தழுவிய மஞ்சு போலவும்" என்பதும். சீவக, 32. 100. (எ) "மஞ்சுதவழ்வெற்பு." நைடத, பிறிவுறு. 15. என்பதும் ‘குன்று, இளமழையாடும்’ என்பதன் பொருளை வலியுறுத்தும். 3. மேகம் மலையில் மேய்தல். திருவிளை, இந்திரன் முடிமேல். 41. (பிரதிபேதம்) 1 அதுகேட்டதோழிதன், 2 விசேடித்துநீ, 3 என்றாள், 4 கூறினாள், 5 அதுகேட்ட தலைவி என், 6 நிற்குமிதென்ன வியப்போளென, 7 பெய்கின்ற, 8 என்றாள்வாராதமை, 9 தோன்றிற்று, கருத்தங்கி.
|