28 | (1) வாரா தமைவானோ வாரா தமைவானோ வாரா 1தமைகுவா னல்லன் மலைநாட (2) னீரத்து ளின்னவை தோன்றி னிழற் 2கயத்து (3) ணீருட் குவளைவெந் தற்று. |
எ - து: 3நின்னது வாராதே ஆற்றியிருப்பானோ? வாராதே ஆற்றியிருப்பானோ? இருக்குமதுவுமன்றி அம்மலைநாடனுடைய அருளிடத்தே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றுமாயின் நிழலையுடைய குளத்துள் நீரினின்ற குவளை வெந்த தன்மைத்து; நீ இங்ஙனங் கூறாதேகொள்; எ - று. நீருட் குவளை வெந்தற்றென்றது மருட்கையுவமம். நிழற்கயத்துள் வேவன இன்மையின் அற்புதமாயிற்று. இஃது உலகநடையிறந்ததோர் உவமை கூறி அதனோடு தலைவன் ஈரத்தினை ஒப்பித்தலிற் பெருமைபற்றி 4வந்தது. இனி அதுகேட்டதலைவி கூறுகின்றாள். 32 | (4) மணிபோலத் தோன்று மணிபோலத் தோன்று மண்ணா மணிபோலத் தோன்றுமென் மேனியைத் துன்னான் றுறந்தான் மலை. |
எ - து: 5 என்மேனியைச் சேராதே துறந்தவனுடைய மலையாயிருந்தும் நீலமணிபோலத் தோன்றும்; நீலமணிபோலத் தோன்றும்; கழுவாத நீலமணி போலத் தோன்றும்; எ - று.
1. "வாராதமைவானோ..................வெந்தற்று" என்பது உவமப்போலி ஐந்தனுள் கூடாப்பொருளோ டுவமித்தற்கு மேற்கோள்; தொல். உவம. சூ. 24. 'உவம' இளம். 2. "ஈரத்து...............வெந்தற்று" என்பதனை மருட்கை யுவமத்திற்கு மேற்கோள்காட்டி "நிழற்கயத்திற் குவளைவேவனவின்மையின் இஃது அற்புதமாயிற்று" என்பர், பேராசிரியரும்; தொல். உவம. சூ. 19. 3. பெருமைபற்றி ஒப்புமை கொள்ளப்படு முவமைக்கு 'நீருட்.....................வெந்தற்று' என்பதை மேற்கோள்காட்டி உலகநடையிறந்ததோருவமை கூறி அதனோடு தலைமகன்ஈரத்தினை ஒப்பித்தமையின் இது பெருமை பற்றிய தாயிற்று என்பர், பேராசிரியரும்; தொல். உவம. சூ. 19. 4. (அ) மலை மணிபோலத்தோன்றல்: "மணிமலை" சிறுபாண் 1. (ஆ) "மண்ணுறு மணியிற் றோன்றுந்தண்ணறுந் துறுக லோங்கிய மலையே." குறுந், 367: 6 -7.(இ) "மணிநிறமால்வரை." (ஈ) "மணிநெடுங் குன்றே.” (உ) "மணிநிறங் கொண்ட மாமலைவெற்பின்" ஐங், 208, 201, 224. (ஊ) "மணித்தலைமலை" திருவிளை, மாணிக். 34. (பிரதிபேதம்) 1 அமைகுவன், 2 கயத்துநீருட், 3 அதுகேட்டதோழி நின்னிடத்து,4 வந்தது மணிபோல, 5 அதுகேட்ட தலைவி என் மேனியை.
|