பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி247

இஃதென்ன வியப்போவெனப் பொருட்புறத்தே இறைச்சி தோன்றிற்று. கொண்ட1வெப்பத்தான் உலராது மழைபெய்து நிறம்பெறுதலின் மணிபோலத்தோன்றுமென்றாள்.

35 (1)துறக்குவ னல்லன் றுறக்குவ னல்லன்
றொடர்வரை வெற்பன் றுறக்குவ னல்லன்
றொடர்பு ளினையவை தோன்றின் விசும்பிற்
சுடரு ளிருடோன்றி யற்று

எ - து: 2நம்மைக் கைவிடுவான் அல்லன்; கைவிடுவான் அல்லன்; (2) ஒன்றோடொன்று தொடர்ந்த சிறுமலைகளையுடைய (3)வெற்பையுடையான் கை விடுவான் அல்லன்; அவனோடு கொண்ட உறவின்கண்ணே இத்தன்மையவாகிய கொடியவை தோன்றுமாயின் ஆகாயத்திற் றிரியும் ஞாயிற்றுள்ளே இருள்தோன்றிய தன்மைத்து; நீ அங்ஙனங் கூறாதே 3கொள்ளெனத் தோழி கூறினாள்; எ - று.

இது மருட்கையுவமம்.

எனவாங்கு, 4அசை.

40 நன் (4) றா கின்றாற் றேழிநம் வள்ளையு
(5) ளொன்றிநாம் பாட மறைநின்று கேட்டருளி

1. (அ) "துறக்குவனல்லன்........................இருடோன்றியற்று"என்பதை இசைநிறைக்கு, மேற்ே்காள் காட்டி 'இதனுள் முந்துற்றசொற் பொருளுணர்த்திற்று; ஏனைய இசைநிறைக்கண் வந்தன; இசை நிறையாவது பாட்டுக் குறித்துவரும்' என்றும். (தொல், எச்ச சூ. 26. 'இசை') (ஆ) "பெயரெஞ்சு கிளவி பெயரொடு முடிமே" என்பதற்கு, 'பெயரை எச்சமாக வுடையசொல் அப்பெயரொடு பொருள் முடிவுபெறும்' என்று பொருள்கூறி "துறக்குவனல்லன்............தோன்றின்" என்பதை அதற்கு மேற்கோள்காட்டி 'இதனுள், அவன் றொடர்பெனவேண்டுதலின் அவனென்னும் பெயர் எஞ்சி நின்றது' என்றும் (தொல். எச்ச. சூ. 38. பெயரெஞ்சு') கூறுவர்; தெய்வச்சிலையார்.

2. "ஒருவரைபோ லெங்கும் பலவரையுஞ் சூழ்ந்த, வருவரை யுள்ளதாஞ் சீறூர்" திணைமாலை. 13.

3. (அ) "சான்றவர் கேண்மை சிதைவின்றா யூன்றி,வலியாகிப் பின்னும் பயக்கு மெலிவில்,கயந்திகழ் சோலை மலைநாடன் கேண்மை,நயந்திகழு மென்னுமென் னெஞ்சு" ஐந் - எழு. 5. (ஆ) "செய்த குறியும் பொய் யாயின வாயிழையா,யைதுகொ லான்றார் தொடர்பு." திணைமொழி. 41.

4. "ஆகின்று" ஐங்குறு, 17, 132, 403; பரி. 8: 10. 21; புறம். 243:1.

5. "என்றியாம் பாட மறைநின்று கேட்டனன்" கலி. 42: 28.

(பிரதிபேதம்) 1 வெப்பந்தானுலறாது, 2 அதுகேட்டதோழி நம்மைக்,3 கொள்ளென்றாள், 4 ஆங்கு அசை.