பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி249

13 ஆர்வுற்றார் நெஞ்ச மழிய விடுவானோ
வோர்வுற் றொருதிற மொல்காத நேர்கோ
லறம்புரி நெஞ்சத் தவன்;
16தண்ணறுங் கோங்கமலர்ந்த வரையெல்லாம்
பொன்னணி யானைபோற்றோன்றுமே நம்மருளாக்
கொன்னாள னாட்டு மலை;
19 கூருநோயேய்ப்ப விடுவானோ தன்மலை
நீரினுஞ் சாய லுடையனயந்தோர்க்குத்
தேரீயும் வண்கை யவன்;
22வரைமிசைமேற்றொடுத்த நெய்க்க ணிறாஅன்
மழைநுழை திங்கள்போற்றோன்று மிழைநெகிழ
வெவ்வ முறீஇயினான் குன்று;
25எஞ்சாதெல்லா கொடுமை நுவலாதி
யஞ்சுவ தஞ்சா வறனிலியல்லனென்
னெஞ்சம் பிணிக்கொண் டவன்;
28என்றியாம்பாட மறைநின்று கேட்டனன்
றாழிருங் கூந்தலென்றோழியைக் கைகவியாச்
சாயலின் மார்பன் சிறுபுறஞ்சார்தர
ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென்
னாயிழைமேனிப் பசப்பு.

இது முன்பு பெற்றவழிமலிந்ததனைப் பின்பு பிரிந்தவழிக் கலங்கிக் கூறியது. என்னை? தலைவன் அருமைசெய்தயர்த்தவழித் தோழி தலைவியை ஆற்றுவித்தற்பொருட்டுத் தலைவனை இயற்பழிப்பத் தலைவி இயற்பட மொழிந்ததனைச் சிறைப்புறமாகக் கேட்டுத் தலைவன் முன்னொருகால்வந்து சிறுபுறஞ் சாரத் தான் ஆற்றினமை குறித்துப் பின்னொருகால் அவ்வாறு பாட அவன் சிறுபுறஞ்சாராமையிற் கலங்கி நெஞ்சொடு கூறியதாகலின்.

இதன் பொருள்.

(1)மறங்கொ ளிரும்புலித் தொன்முரண் டொலைத்த
(2)முறஞ்செவி வாரண முன்குள கருந்திக்


1. (அ) "மறப்புலி" பதிற். 41 : 7 ; புறம். 90 : 3; சீவக. 752.(ஆ) "மறங்கொ ளிரும்புலி" சிலப். 12 : 28.

2. (அ) " முறஞ்செவி யானை" புறம். 339 : 13. (ஆ) "முறஞ்செவி வாரணம்" சிலப். 10 : 247. (இ) " முறஞ்செவி யானையும்" மணி.