| 1 கறங்குவெள் (1) ளருவி 2யொலியிற் றுஞ்சும் (2) பிறங்கிருஞ் சோலை (3) நன்மலை நாடன் | 5 | மறந்தான்மறக்கினி யெல்லா (4) நமக்குச் 3சிறந்தனநாநற் கறிந்தன மாயி (5) னவன்றிறங் (6)கொல்யானைக் கோட்டால் (7) வெதிர்நெற் 4குறுவாநாம் வள்ளை யகவுவம் வா,இகுளைநாம் வள்ளை யகவுவம் வா |
19 : 121. (ஈ) "சுளகு வார்செவித் தூங்குகைக் குஞ்சரம்" சீவக. 1778. (உ) "முறஞ்செவி வாரண முகத்துத் தம்பிரான்" விநாயக. தூர்வைதுலை. 22. 1. அருவி யொலியில் விலங்கு துயிலுமென்பதை (அ) " வேட்டம் படரு முடங்குளைமான் புனிற்றுக் குருளை விழிதுயில, மோட்டு முதுநீர்ப் பஃறலைய வருவிதூங்கு முகிறவழ்பொற், கோட்டில்" (ஆ) " கறங்குகுர லுளையரிமான் சிறுகுருளை கவிழ்தலைய வருவியோலி, னுறங்குமுயர் பொலங்குடுமி யிமயம்" காசி. காசியின். 7 : கேதார. 6. 2. "நிவந்தோங்கிய சோலை, மலைகெழு நாடன்" குறுந், 201. 3. (அ) " நன்மலை நாடன்" (ஆ)" நன்மலை நன்னாட" கலி. 38 : 24, 49. 9. 4. (அ) "யாமுமக்குச், சிறந்தன மாத லறிந்தனி ராயின்" (ஆ)"சிறந்தானை வழிபடீஇ" கலி. 5 : 4 - 5, 9 : 23; என்பவையும் அவற்றின் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன. 5. (அ) "தினைகுறு மகளி ரிசைபடு வள்ளையும்" மலைபடு. 342. (ஆ) "இன்னிசைக் கோதையர், வள்ளை பாடுவர் மன்னவன் வண்மையே" அரிச்சந்திர. நகரச்சிறப்பு. 7 6. (அ) " வயக்களிற்றுக், கோடுலக்கை யாக.................. வாடுகழை நெல்லை யறையுரலுட் பெய்திருவாம், பாடுகம்" கலி. 41 : 1 - 4 என்பதும் அதன் குறிப்பும் ஈண்டு அறிதற்பாலன. (ஆ) "கொல்யானை" கலி. 54 : 32, 134. 3; 134; 3 -இல், கொல்யானை என்பதும் அதன் குறிப்பும் பார்க்க. 7. வெதிரினெல்லும் வேயின் முத்தும் கூறுதல் மரபு: (அ) "வேயுட் பிறந்த வாய்கதிர் முத்தம், வெதிரிற் பிறந்த பொதியவி ழருநெல்"பெருங்.(1) 51 : 11 - 12. (ஆ) "வேய்கண் ணுடைந்து முத்துதிரவும், வெதிர்கண் ணுடைந்து நெல்லுதிரவும்" யா-வி. சூ. 95. மேற்கோள், 'நலஞ்செல' எனவும் (இ) "நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த (பிரதிபேதம்) 1 கறங்கும், 2 ஒலில், 3 சிறந்தமை, 4 குறுவானாம்.
|