எ - து; மறத்தைத்தன்னிடத்தேகொண்ட பெரிதாகிய (1) புலியினதுபழைய மாறுபாட்டைக்கெடுத்த முறம்போலுஞ் செவியையுடைய (2) யானை தனக்கு முன் நின்ற (3) குளகைத் தின்று ஒலிக்கின்ற வெள்ளிய அருவிநீரைப் பருகி அஃது ஓலுறுத்துதலாற்றுயில்கொள்ளும் பெருக்கின்ற கரிய சோலையினையுடைய நல்ல மலைநாட்டையுடையவன் நாம் வருந்த நம்மை மறந்தான், இனி அவன் மறப்பானாக; (4) 1இகுளையே! ஆராய்ந்து பார்க்கின் நாம் நமக்கு அவன் சிறந்தபடியை மீளவும் அறிந்தேம், இனிக் கொன்றயானையின் கொம்பாலே மூங்கினெல்லைக் (5) குறுதற்கு நாம் அவன்செய்த கொடுமையின் கூற்றை வள்ளைப்பாட்டாகப் பாடுவேமாகவாவெனத் தோழிஇயற்பழிக்க, அதுகேட்ட தலைவி தான் இயற்படமொழிவாளாகக் கருதி ஏடீ! நீ கூறியவாறன்றி அவன் திறத்தை நாம் (6) வள்ளைப்பாட்டாகப் பாடுவேமாக வாவென்றாள்; எ - று.
யானை" குறிஞ்சி, 35 (ஈ) " நெல்லுடை நெடுவெதிர்" (உ) "புல்லிலை வெதிர நெல்விளை காடே" அகம். 185 : 6. 397 : 16. (ஊ) "சிறியிலை வெதிரி னெல்விளை யும்மே" புறம். 109 : 4. (எ) "நெற்பட்ட கண்ணே வெதிர்சாம்" நான்மணி. 4. எனவும் வருதல் காண்க. சிற்சில விடத்து அருகி மாறியும் வரும். 1. (அ) "கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப், புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்,றலைமருப்பு" (ஆ) "இரும்புலி தொலைத்த பெருங்கை யானை" நற். 39 : 4 - 6. 353 : 9; (இ) "சிறுகட் பெருங்களிறு வயப்புலி தாக்கித், தொன்முரண் கொல்லுந் துன்னருஞ் சோலை" குறுந். 88; (ஈ) "இரும்புலி தொலைத்த பெருங்கை வேழத்து" (உ) "வேங்கை, யடுமுரண் டொலைத்த நெடுநல் யானை" அகம், 272 : 1, 307 : 9 - 7. 2. யானை, புலியைக்கொன்று மலைப்பக்கத்தி லுறங்குதல்: "கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு,நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை" கலி. 49 : 1 - 2. 3. குளகென்பது இலையுணும்விலங்குணவென்பர்; அது யானையின் உணவாகிய தழைக்கே (அ) "இன்குளகு" (முல்லை. 33) (ஆ) "குளகமர்ந்துண்ட" (கலி. 43 : 20) (இ) "உண்குளகு மறுத்த" (அகம். 392 : 3) (ஈ) 'நாகம்..............அதிமதுரத்தின்குளகைக் கையிலேகொண்டால்' (சீவக. 250. உரை) எனப் பெரும்பாலும் வருகிறது. 4. கலி. 103 : 31. "இகுளை" என்பதன் குறிப்பைப் பார்க்க. 5. இவ்வுரையை நோக்க 'குறுவான்' என்றபாடஞ் சிறந்ததாயினும் 'குறுவாம், வினையெச்சமுற்று' என்ற விசேடக்குறிப்பால் குறுவா மென்று பாடங்கொள்ளப்பட்டது. 6. வள்ளை - உலக்கைப்பாட்டு; உரற்பாட்டென்றுங் கூறப்படும். (பிரதிபேதம்) 1 இளையோய் ஆராய்ந்து.
|