பக்கம் எண் :

252கலித்தொகை

1மறக்க, வியங்கோள். மறந்தான்மறக்கவென்றது அருமைசெய்தயர்த்தலை. இகுளை ஆயின் என்பனவற்றை முன்னே மாறிக்கூட்டுக. எல்லாவென்பதனைப் பின்னே கூட்டுக.

" முறைப்பெயர் மருங்கிற் கெழுதகைப் பொதுச்சொ, 2னிலைக்குரி மரபி னிருவீற்று முரித்தே" (1) என்பதனான் (2) எல்லாவென்றாள். குறுவாம், வினையெச்சமுற்று.

நாடனென்றதனால் நாமும் அயலார் கூறும் பழைய அலரைக் கெடுத்துத் தன் மனத்து உளவாகிய நுகரும்பொருள்களை நுகர்ந்து தானுஞ் சுற்றமும் புகழ்ந்துகூறத் தன்னில்லின்கண் நாம் இருக்கும் நிலைமையை நிகழ்த்தாது நாம்வருந்த நம்மை மறந்தானென்று உள்ளுறையுவமங்கொள்க. "கிழவோட்குவம மீரிடத் துரித்தே" என்னும் (3) உவமவியற் சூத்திரத்துச் சிறுபான்மை குறிஞ்சிமுதலிய வற்றிற்கும் 3 உவமப்போலிகொள்க என்றலிற் குறிஞ்சியில் உவமப்போலிகொண்டார். "தோழியுஞ் செவிலியும் பொருந்துவழி நோக்கிக், கூறுதற் குரியர் கொள்வாழி யான" (4) என்பதனால், தோழி 4உவமப்போலி கூறினாள். இது பயவுவமப்போலி. இந்நிலத்து முன் உள்ளுறை கூறியவற்றிற்கும் பின்னர் உள்ளுறை கூறகின்றவற்றிற்கும் இதுவே விதியாகக் கொள்க.

10 (5) காணிய வாவாழி தோழி வரைத்தாழ்பு
(6) வாணிறங் கொண்ட வருவித்தே நம்மருளா
நாணிலி நாட்டு மலை.

1. தொல். பொருளி. சூ. 26.

2. எல்லாவென்பது ஏடீயென்னும் பொருளில் 'எலாஅ' என்றும் 'ஏலா' என்றும் வருகின்றது.

3. தொல். உவம. சூ. 29

4. தொல். உவம. சூ. 31

5. (அ) "காணிய வாவாழிதோழி" என்பது செய்யியவென்னும் வாய்பாட்டு வினையெச்சம் வினைமுதல் வினைகொண்டு முடிந்ததற்கு மேற்கோள்;நன். வினை. சூ. 25.வி. இரா. இ - வி. சூ. 247. (ஆ) "காணியவாநீ வாழியதோழி" என ஒருமேற்கோள் நன். வினை.சூ. 25.மயிலை நாதர் உரையிற் காணப்படுகிறது.

6. (அ) "வாள்வனப்புற்ற அருவி...........குன்றே". ஐங்குறு. 312. (ஆ) "வாளிலங் கருவி தாஅய் நாளை" அகம். 278 : 7 (இ) "வாள்வெள்ளருவி வரைமிசை யிழியவுங்,கோள்வலுழுவை விடரிடை யியம்பவும்" (தொல். செய். சூ. 228. 'இயைபுவண்ணம்' இளம். மேற்.) (ஈ) "வாளருவித், தடமலை மேலுங்கள் சீறூரெதுவென்பர்" அம்பிகா. 87.

(பிரதிபேதம்) 1 மறக்கு, 2 நிலைக்குரிய மரபி, 3 வுவமப் பொலிவுகொள்க, 4 உவமப்பொலிவு.