பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி253

எ - து; வாழ்வாயாக தோழி ! நம்மை அருளாத கொடுமைக்கு (1) நாணாதிருக்கின்றவனுடைய 1 நாட்டின் மலையாயிருந்தும் பக்கமலையிலே தாழ்ந்து ஒளியையுடைய நிறத்தைக் கொண்ட அருவியை யுடைத்தா யிராநின்றது, இதற்குக் காரணத்தை நம்மனத்தான் ஆராய்தற்கு வாவெனத் தோழி இயற்பழித்தாள்; எ - று.

13 (2)ஆர்வுற்றார் நெஞ்ச மழிய விடுவானோ
வோர்வுற் றொருதிற மொல்காத நேர்கோ
(3)லறம்புரி நெஞ்சத் தவன்

எ - து; ஒரு கூற்றிற் சாயாத 2 நேர்நிற்குந் (4) துலாக்கோல்போலஓர்தலுற்று அறத்தையே விரும்பின நெஞ்சத்தையுடையவன் தன்னான் (5) நுகரப்பட்டார் நெஞ்சத்தை அழியும்படி விடுவனோ? விடான் காணெனத் தலைவி இயற்பட மொழிந்தாள். எ - று.


1. நாண,் மகளிர்க்கன்றியும் ஆடவராகிய நன்மக்களுக்கு முரித்தென்பதனை (அ) "வடுப்பரியு, நாணுடையான் கட்டே தெளிவு" (ஆ) "கருமத்தானாணுத் னாணுத் திருநுத,னல்லவர் நாணுப் பிற" (இ) "நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்" குறள். 502, 1011, 1133. (ஈ) "நாணிலான் சால்பு...............நாடி னகை" சிறுபஞ்ச. 12. என்பவற்றாலும் அறியலாம்.

2. "உயர்மொழிக் குரிய வுறழுங் கிளவி" என்புழி, "மறங்கொளிரும் புலியென்னுங் குறிஞ்சிக்கலியுள் 'ஆர்வுற்றார்....................நெஞ்சத்தவன்'எனத் தலைவிகூறலும், 'தண்ணறுங் கோங்க.................னாட்டுமலை' எனத் தோழி உறழ்ந்துகூறியவாறு காண்க. இதுவும் தலைவி கூற்றிற்கு மாறாதலின் வழுவாய்ச் சிறைப்புறமாகக் கேட்டு வரைதல் பயனாதலின் அமைந்தது" என்பர், நச். தொல். பொருளி. சூ. 44.

3. "அறங்கிடந்த நெஞ்சும்" நள. சுயம்வர. 47.

4. (அ) "துலாக்கோ லியல்பே தூக்குங் காலை,மிகினுங் குறையினு நில்லா தாகலு,மையந்தீர்த்தலு நடுவு நிலைமையோ,டெய்தக் கூறுப வியல் புணர்ந்தோரே" (ஆ) "துலைநா வன்ன சமநிலை" (இ) "செம்பொற்றுலைத் தாலமன்ன தனிநிலை" கம்ப. மந்தரை. 19. (ஈ) "ஐயந்தீரப் பொருளை யுணர்த்தலு, மெய்ந்நடு நிலையு மிகுநிறைகோற்கே" நன்.

5. 'ஆர்வு' என்பது அனுபவித்த லென்னும் பொருளில் வருதற்கு, "ஆர்வுற்ற, விட்டகல கில்லாத வேட்கையும்" என்பதும் சான்றுபகரும்; திரிகடுகம். 65. ஆர்வமுறலென்பது ஆர்வுறலென வருதலுமுண்டு.

(பிரதிபேதம்) 1 நாட்டுமலை, 2. நாநிற்கும்.