பக்கம் எண் :

256கலித்தொகை

(1) சாயலின் மார்பன் சிறுபுறஞ் சார்தர
(2) ஞாயிற்று முன்ன ரிருள்போல மாய்ந்ததென்
னாயிழை மேனிப் பசப்பு.

எ - து; 1என்று தந்நெஞ்சுடனே முன்மொழிந்து பின்பு யாங்கள்பாட மறைந்துநின்று கேட்டனனாய் மென்மையால் இனிய மார்பினையுடையான் தாழ்ந்த கரிய கூந்தலையுடைய என்றோழியை எனக்கு அவள் வரவுகூறாமற் கையைக் கவித்து என், சிறிய புறத்தைச் சேர என்னுடைய ஆராய்ந்த இழையினையுடைய மேனியிற் பசப்பு ஞாயிற்று முன்னர் நின்ற இருள்போலக் கெட்டதென்று யாம் 2அவ்வாறு பாடவும், அவன் (3) சிறுபுறஞ்சாராமையின் நம் மேனியிற் (4) பசப்பு மாயாமல் நின்றதெனப் பிரிந்தவழிக் கலங்கினாள்;எ - று.

இது "சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொள் ளியற்கை, புல்லிய கிளவி யெச்ச மாகும்" (5) என்பதனாற் கூற்றெச்சமாம்.

இதனால், உயிர்ப்பென்னும் மெய்ப்பாடு தலைவிக்குத் தோன்றிற்று.

இஃது ஐஞ்சீரடியுஞ்சொற்சீரடியும் வந்த தரவுவந்து ஏனைய வெண்பா வாய் வந்த கலிவெண்பா. (6)


1. (அ) "இன்சாயன்மார்பன்" (ஆ) "சாயலின் மார்பு" கலி. 65 : 5, 94 : 38.

2. (அ) "ஞாயிற்றுமுன்னரிருள்போல மாய்ந்ததென், னாயிழையுற்றதுயர்"(ஆ) "ஆயிழை மடவர லவல மகலப்,
பாயிருட் பரப்பினைப் பகல் களைந்ததுபோல....................வந்தனர்" (இ) "இருளு முண்டோ ஞாயிறு சினவின்"
(ஈ) "பொங்கு பானுமுன் னிருளென முடிந்தது" (உ) "அங்கண்மா ஞாலமுண் டமரு மாரிருள்,பொங்குபே ரொளிவர விளிந்து போனபோல்" (ஊ) "ஆயிரங் கிரணத் தலர்கதிர் முன்னம,்பாயிருள் கெடுமெனப் பகர்பழ மொழியும்" (எ) "ஊழுறு வறுமை பரிதிவான வன்முன்னுள்ளிருட் பிழம்பென வொழியும்" (ஏ) "வெங்காரிருள் பானு விளங்க வொதுங்கு மாபோல்" (ஐ) "வினை முழுது மாயும் வயங்கொளியோன்மின்னுங்கனகவுதயவரை மேவவிருள்வீந் திடுவது போல்" (ஒ) "பாவம்.................சுடர்துறக்கு மிருள்போலப் பெயர்ந்த தன்றே" (ஓ) "தவனோ தயத்தி லிருளென்னச் சாய்ந்தான்" (ஒள) "இரவி பொற்கதிர் தெறுதலி னிரிதரு மிருளெ னத்திசை திசைதொறு முதுகிட" (ஃ) "சாப மொல்லைவெஞ் சுடர்மு னள்ளிரு ளெனவகன்றதே" (அஅ)"இருளை, யருணனுண்டென" (ஆஆ)"பொங்குகாரிரு ளிரவிகண்டெனப் புலர்ந்தாங்கு."

3. சிறபுறம் - புறக்கழுத்து.

4. பசப்பு - தலைவனைப் பிரிந்திருக்கு மகளிர்க்குப் பிரிவாற்றாமையான் வருவதொரு நிறவேறுபாடு.

5. தொல். செய். சூ. 206.

(பிரதிபேதம்) 1 முன்மொழிந்து தன்னெஞ்சுடனே யென்றுமுன்பு யாங்கள்.2 இவ்வாறு.