எ - து: என்னுடைய தோழி தன்னுடைய வருத்தமுறாநிற்கவும் நீ செய்த அருளில்லாமையை என்னையும் உட்பட மறைத்தாள்; அவள் இங்ஙனம் மறைத்தது அவ்வருளின்மையைக் கேட்டு யான் நின்னைப் பிறர்முன்னே பழி கூறுதலைத் தான் நாணிக்காண்; எ - று. யான் பழிகூறுவேனென்று தான் நாணியெனத் தலைவி குறியாத தொன்றைக் கூறினமையின் 1இது (1) குறியா கூறலாம். உம்மை, சிறப்பு. 11 | கூருநோய் 2சிறப்பவு நீசெய்த வருளின்மை சேரியு மறைத்தாளென் றோழி யதுகேட்டாங் கோருநீ 3நிலையலை யெனக்கூற றானாணி |
எ - து: என்னுடைய தோழி மிகுகின்ற காமநோய் சிறவாநிற்கவும் நீ செய்த அருளில்லாமையைச் சேரியிலுள்ளாரும் அறியாதபடி மறைத்தாள்; அவள் இங்ஙனம் மறைத்தது அவ்வருளின்மையைக் 4கேட்குமப்பொழுதே நீ நிலைபே றுடையையல்லையென்று யான் பிறர்க்குக் கூறுதலைத் தான் நாணிக்காண்; எ - று. உம்மை, சிறப்பு. (2) ஓரும், அசை. 14 | நோயட வருந்தியு நீசெய்த வருளின்மை யாயமு மறைத்தாளென் றோழி யதுகேட்டு மாயநின் பண்பின்மை பிறர்கூற றானாணி |
(அஅ) “வெற்பா வுன் பழியை யன்னை, பண்ணைமின் னாரென வேயறி யாவகை பார்த்தெனையும், பண்ணையுந் தேமொழி நாணா மறைத்தனள் பாங்குறவே” திருவாவடுதுறைக். 254. (ஆஆ)“நண்பாமுழு முத்தமுலை, யுழியேறு பீருங் கழலும் வளையு முணர்ந்துனக்குப், பழியேறு மென்று மறைத்தா ளெனையும் பசுங்கொடியே” சீகாழி. 281. என்பவைகள் இத்தாழிசைக் கருத்தையும் (இஇ) “தன்னையுந் தோளையுந் தோளினில் லாவரிச் சங்கை யுங்கண், டுன்னையிங் கோது முறுபழி நாணி யுளங்கிடந்த, தன்னையுஞ் சேரியு மாயத் துளாரு மயலுமன்றி, யென்னையுங் கூடவெற் பாமறைத் தாளென் னிளங்கொடியே” அம்பிகா. 266. என்பது தாழிசை மூன்றன் கருத்தையும் ஒத்திருத்தல் காண்க. 1. இந்நூற்பக்கம். 269 : 1 - ஆம் குறிப்பில் (ஆ) பார்க்க. 2. ஓரும் என்பதைப் புறனடையால் அசையெனக் கொண்டார், நச்; தொல். இடை.. சூ. 48. (பிரதிபேதம்) 1அதுகுறியாள் கூறலாம், குறியாது கூறலாம், 2எய்ப்பவும்,3நிலையிலை, 4கேட்டு அப்பொழுதே.
|