8 | (1) தன்னெவ்வங் கூரினு நீசெய்த வருளின்மை யென்னையு மறைத்தாளென் றோழி யதுகேட்டு நின்னையான் பிறர்முன்னர்ப் பழிகூற றானாணி |
1. "தன்னெவ்வங்.............. பழிகூற றானாணி" என்றபகுதியை, (அ) "காதன் மிகுதியுளப்படப்பிறவும்’ என்புழி, பிறவுமென்பதனால் தலைமகள்தன்னை ய[ழி](றி)ந்தமை (தோழி) கூறுதலும் தலைவன் மாட்டுவரும் இடையூறஞ்சுதலுங்கொள்கவென்றுகூறித் தலைமகள் தன்னைய[ழி](றி)ந்ததற்கு, இளம்பூரணரும்,(ஆ) ‘எண்ணரும்பன்னகை கண்ணியவகையினும்’ என்புழி, பலநகைகுறித்த பகுதி என்னைமறைத்த லெவனாகியரென்றலும் அறியாள் போறலும் குறியா[ள்] கூறலும் படைத்துமொழி கிளவியும் குறிப்பு வேறுகொளலும் பிறவுமாமென்றுகூறிப் பழிகூறுவேனென்று தலைவி குறியாததொன்றைத் தோழி கூறினதற்கு நாச்சினார்க்கினியரும் தொல். கள. சூ. 23. (இ) தலைமகளறிவு தலைமகற்கு அறிவுறுத்தற்கு நாற்கவிராசநம்பியும்; நாற்கவி. சூ. 166 மேற்கோள் காட்டினர். (ஈ) "ஊரல ரெடுத்தரற்ற வுள்ளாய்நீ துறத்தலிற்,கூருந்தன் னெவ்வ நோ யென்னையு மறைத்தாண்மன்” கலி. 124 : 5 - 6 . (உ) "தானும் யானுமென் றிருவே றிலமே,யானு மறியாக் கரப்பினண், மானுண் கண்ணி வரையர் மகளே" தமிழ்நெறி. மேற்.(ஊ) "கன்னிய ருற்றநோய் கண்ண னார்க்குமஃ,தின்னதென் றுரையலர் நாணின்" சீவக. 1028. (எ) "மெல்லிய லொருத்திதான் விரும்புஞ் சேடியைப்,புல்லிய கையினள்போதி தூதெனச்,சொல்லுவா னுறவுற நாணுஞ் சொல்லல,ளெல்லையில் பொழுதெலா மிருந்துவிம்மினாள்" கம்ப. உண்டாட்டு. 46. (ஏ) "தாமுறு காமத் தன்மை தாங்களே யுரைப்ப தென்பதாமென லாவதன்றாலருங்குல மகளிர்க்கம்மா"கம்ப, சூர்ப்ப. 45. (ஐ) "தையனல்லாள்பழி சாற்றுவல்யா,னென நாணி நின்பழி தான்மறைத் தாளன்ப வென்னையுமே" தஞ்சை, 235. (ஒ) "திறற்கே புலியன்ன கோழிக் குலோத்துங்க சென்னிவெற்பி, லுறற் கேதஞ் சொல்லி யுனைப்பழித் தேன்சுழித் தோடுபொன்னி, யறற்கேச வல்லி யதற்குள நாணி யனைமுதலாம் பிறர்க்கே, யொளிப்பதொளித்தா ளெனக்கும் பெருந்தகையே" குலோத்துங்க. 271. (ஓ) "தெரிவை யர்க்குளங் கூசு மாசைநோய் கூறுகிற்பதென், றெம்மனோர்களுஞ் சொல்வர்" வில்லி. வேத்திர. 5. (ஒள) "முத்தே நிகர்த்த குறுநகை யாளை முதுக்குறைசோ, தித்தேன்றன் னாணி மறைத்தா ளெனையுஞ் செகதலத்தி, லெத்தேவ ரும்புக ழாழ்வார் குருகை யிறையவ நான், பொய்த்தேனு முன்னைப் பழித்தாலுஞ் சற்றும் பொறுக்கிலளே" மாறன்கோவை. 266. (ஃ) "தற்பழி யாகநின் றன்பழி நாணித் தலைவவறக், கற்பழி யாது மடமாதெனையுங்காந்தனளே" திருவெங்கை. 238
|