| கடையெனக் கலுழுநோய் கைம்மிக வென்றோழி தடையின திரண்டதோ டகைவாடச் சிதைத்ததை; | 16 | சுடருறவுறநீண்ட சுரும்பிமி ரடுக்கத்த விடர்வரை யெரிவேங்கையிணரேய்க்கு மென்பதோ யாமத்துந் துயிலல ளலமருமென்றோழி காமரு நல்லெழில் கவின்வாடச்சிதைத்ததை; எனவாங்கு; | 21 | தன்றீமைபலகூறிக் கழறவி னென்றோழி மறையிற்றான் மருவுறமணந்தநட் பருகலாற் பிறைபுரை நுதலவர்ப் பேணிநம் முறைவரைந் தனரவ ருவக்குநாளே. |
இது வரைவிடையாற்றாததலைவிக்குத் தோழி தான் தலைவனை நெருங்கி வரைவுகடாவ அதுகேட்ட தலைவன் வரைவுமுயற்சியான் வருதல்இடையிட்டதூஉந் தமர்வரைவெதிர்ந்ததூஉங் கூறி அவளை ஆற்றுவித்தது. இதன் பொருள். (45) | (1) விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறைக் கடிசுனைக் கவினிய (2) காந்தளங் குலையினை |
1. விடியலென்பது நாள்வெயிற் காலையென்னும் பொருளில் வருதற்கு, “விடியல்வெங் கதிர்காயும் வேயம லகலறை” என்பது மேற்கோள். தொல். அகத். சூ. 8. நச். இ - வி. சூ. 385. 2. காந்தட் குலையும் அரவும் ஒத்திருத்தல்: (அ) “பாம்புபை யவிந்தது போலக் கூம்பிக், கொண்டலிற் றொலைந்த வொண்செங் காந்தள்” (ஆ) “காந்த, ணறுந்தா தூதுங் குறுஞ்சிறைத் தும்பி, பாம்புமிழ் மணியிற் றோன்றும்” குறுந். 185, 239. (இ) “திருமணி யுமிழ்ந்த நாகங் காந்தட்,கொழுமடற் புதுப்பூ வூதுந் தும்பி,நன்னிற மருளு மருவிடர்” அகம். 138 : 17 - 19. (ஈ) “அணர்த்தெழு பாம்பின் றலைபோற் புணர்க்கோடல்,பூங்குலை யீன்ற புறவு” கார். 11. (2) (உ) “பூங்கோட லோடி-யுருமுற்ற, வைந்தலை நாகம்புரையும்” திணைமாலை. 107. (ஊ) “ஓங்க லிறுவரைமேற் காந்தள் கடிகவினப், பாம்பெனவோடி யுருமிடிப்பக் கண்டிரங்கும்” (எ) “கோடலங் கூர்முகை கோளரா நேர்கருத” திணைமொழி. 3;29. (ஏ) “மலர்க்காந்தளங்குறி பையரா விரியும்” (ஐ) “பைவாய் நாகங் கோடலீனும்” (ஒ) “கோட லரவீனும்” (ஓ) “பையரவம் விரிகாந்தள்” தேவாரம்.
|