யருமணி யவிருத்தி(1)யரவுநீ ருணல்செத்துப் (2) பெருமலை மிளிர்ப்பன்ன காற்றுடைக் (3) கனைபெய லுருமுக்கண் ணுறுதலி னுயர் (4) குர லொலியோடி நறுவீய (5) நனஞ்சாரற் சிலம்பலிற் கதுமெனச் சிறுகுடி துயிலெழூஉஞ் சேணுயர் (6)விறல்வெற்ப
(ஒள) “வாளெயிற்றரவம்போல வான்றலை தோன்றவார்ந்த,தாளுடைக்கோட றம்மிற் றழீஇயின காத றங்க, மீளல வாகி மன்ன விழைவன வுணர்வு வீந்த,கோளர வென்னப் பின்னி யவற்றொடுங் குழைந்து சாய்ந்த” கம்ப. கார்காலப். 27. (ஃ) "முள்வாளெயிற் றரவம்மென முகிழ்விண்டன காந்தள்” பாக. 10. வேங்குழல். 12. (அஅ) “அராநிவந் தி வர்ந்தெனக்,களிதரு கோடல்பா சரும்பு கான்றவே” காஞ்சி. கழுவாய். 146. 1. உருமேறு காந்தளை அரவாகக் கருதலுண்டென்பது இந்நூற்பக்கம் 272: 1-ஆம் குறிப்பில் (ஊ) மேற்கோளால் அறியலாகும்; “செயலை, யோங்குசினைத் தொடுத்த வூசல் பாம்பென, முழுமுத றுமிய வுருமெறிந் தன்றே” எனவும் (அகம். 68: 5 - 7.) வருதலால் இஃது அரவென்று கருதியதனை எறியு மியல்பிற்றுப் போலும். 2. (அ) “காலொடு வந்த கமஞ்சூன் மாமழை,,,,,,,,,,,,,,,,,,,,,யிமயமுந் துளக்கும் பண்பினை” (குறுந். 158) என்பதும் (ஆ) “காம்புடை விடரகஞ் சிலம்பப் பாம்புடன், றோங்குவரை மிளிர வாட்டி வீங்குசெலற்,கடுங்குரலேறொடு கனைதுளி தலைஇப்,பெயலானாதே வானம்” (இ) “ஈர்ங்குரலுருமி னார்கலி நல்லேறு, பாம்புகவி னழிக்கு மோங்குவரைமொத்தி” (ஈ) “மாமழை,,,,,,,,,,,,,,,,,,ஓங்குவரை மிளிர வரட்டிப் பாம்பெறிபு” (நற். 51 : 2 - 5, 114 : 9 - 10, 347 : 1 - 3) (உ) ”அஞ்சுவரு மரபின் வெஞ்சினப் புயலே,றணங்குடை யரவி னருந்தலை துமிய, நின்றுகாண் பன்ன நீண்மலை மிளிரக், குன்றுதூ வெறியு மரவம் போல” (ஊ) “கோடிறு, புருமெறி மலையி னிருநிலஞ் சேர” (புறம். 211 : 1 - 4 373....................;) (எ) “உருமெறிந் தெங்கும்,பெருமலை தூவெறிந் தற்றே” (கள. 6) என்பவைகளும் இங்கே அறிதற்பாலன. 3. “கனைபெயல்” ஐங். 405; கலி. 46 : 18, 48 : 15, 90 : 22, 116 : 14; திணைமொழி. 28. 4. “இடித்து முழங்கியதோர் யோசனையோர் கேட்பர்” நாலடி. 100. 5. “நனஞ்சாரல்” கலி. 44 : 1. 6. இந்நூற்பக்கம் 267 : 6 - ஆம் குறிப்புப் பார்க்க.
|