பக்கம் எண் :

274கலித்தொகை

எ - து: விடியற்காலத்து விரும்பிய (1) ஞாயிற்றைக் கெடுக்கும் மூங்கில் நெருங்கின அகன்ற (2) மாணிக்கப்பாறையிடத்து மணத்தையுடைய (3) சுனையிடத்தே அழகுபெற்று வளர்ந்த காந்தளினது அழகிய குலையினைப் பெறுதற்கரிய (4) மணி விளங்குகின்ற பொறியினையுடைய (5) பாம்பு நீரை உண்டலாகக் கருதி, பெரிய மலைகளைக் கீழ்மேலாக்குமாறுபோலே இருக்கின்ற காற்றினை


1. (அ) ஞாயிற்றைக்கெடுக்கும் மாணிக்கமென்பதனோடு இருள்பருகுமணி யென்பதற்கு “உதயகிரியிற் சிந்தூர அருவி வீழ்ந்த சிந்தூராகரத்திற் பதினாறு சதுர்யுகம் சிவப்பேறின முழுமாணிக்கம் இருளைக்கெடுக்குமென இவ்வுரையாசிரியர் (சீவக. 169) எழுதியிருக்கும் விளக்கமும் (ஆ) “ஐவனங் காவலர் பெய்தீ நந்தினொளிதிகழ் திருந்து மணி நளியிருளகற்றும்,வன்புல நாடன்” (புறம். 172 : 6 - 8.) என்பதும் ஒப்பிடற் பாலன.

2. “மாணிக்கப்பாறை” கலி. 44.

3. “அரவுடன் றவைபோல விரிந்த குலை ..................... சுனைகழிந்து தூங்குவன” பரி. 20 : 99 - 101.

4. “நாகப்பாம்பின் றலையில் மணியுண்டென்பது (அ) “பாம்புமணி யுமிழ” (ஆ) “பாம்புமிழ் மணியிற் றோன்றும்” (இ) “பெருமலை வயின்வயின் விலங்கு மருமணி, யரவழங்கும்” (ஈ) “நாம நல்லராக் கதிர்பட வுமிழ்ந்த, மேய்மணி” (உ) “பாம்பின், றிருமணி விளக்கில்” (ஊ) “அரவுமிழ் திருமணி” (எ) “மேய்மணி யிழந்த பாம்பின்” (ஏ) “அரவுமிழ் மணியில்” (ஐ) “ஏழ்மணியங் கெழணியுத்திக், கட்கேள்விக் கவை நாவி, னிறனுற்ற வராஅப்போலும்” (ஒ) “அருமணி யிழந்த நாகம் போன்றதும்” (ஓ) “நன்மணி யிழந்த நாகம் போன்று” (ஒள) “பைபருகு மணியுமிழ்ந்து பணநாக மிரைதேரும்” (ஃ) “மணியுமிழ்ந்து மாமலைமேன் மேய்வனவு நாகம்” (அஅ) "இழந்தமணி புற்றரவெதிர்ந்த தெனலானாள்” (ஆஆ)“அரவின்வெஞ் சுடிகை கொண்ட வவிர்மணி” (இஇ) “அரவுமிழ்ந்த செம் மணிக்கணம்” என்பவற்றாலும் இந்நூற் பக்கம் 272 : 2 - ஆங் குறிப்பில் (ஆ, இ) இப்பக்கம் 5 - ஆங் குறிப்பில் (இ, ஈஈ, எஎ) என்பவற்றின் மேற்கோள்களாலும் அறியலாகும்.

5. உருமேறு பாம்பை எறியுமென்பது மரபு: (அ) “நாகத், தணங்குடை யருந்தலை யுடலி வலனேர், பார்கலி நல்லேறு திரிதருங்,கார்செய் மாலை வரூஉம் போழ்தே” (ஆ) “கேழ்கிள ருத்தி யரவுத்தலை பனிப்பப்,படுமழை யுருமி னுரற்றுகுரல்” (இ) “பெயன்கான் மயங்கிய பொழுது கழி பானாட், டிருமணி யரவுத்தேர்ந் துழல, வுருமுச்சிவந் தெறியு மோங்குவரை யாறே” நற். 37: 8 - 11, 129 : 7 - 8, 255 : 9 - 11; (ஈ) “நெடுவரை மருங்கிற் பாம்புபட விடிக்குங், கடுவிசை யுருமின் கழறுகுரலளைஇக்,காலொடு வந்த கமஞ்சூன் மாமழை” (உ) “பொறி வரி, வெஞ்சின வரவின் பைந்தலை துமிய, நரையுரு முரறு மரையிரு ணடுநாள்”