யுடைத்தாகிய செறிந்த மழையில் உருமேறு இடித்தலால் எழுந்த உயர்ந்த ஓசையாகிய ஓசை பரந்து 1நறிய பூக்களையுடைய சாரலிலே ஒலிக்கையினாலே விரையச் சிறுகுடியினுள்ளார் உறக்கமுணருாம் மிக உயர்ந்த வெற்றியினையுடைய வெற்பனே; எ - று. மாணிக்கப்பாறை தலைவி உறைகின்ற மனையாகவும், சுனையிடத்துக் காந்தள் சுற்றத்தார் பேண அழகுபெற்ற தலைவியாகவும், மணத்தைத்தரும் அக்காந்தள் பாம்புபோற் றோன்றியது மேல் இல்லறத்தைத் தருகின்ற களவொழுக்கம் பிறர்க்குத் தீங்குபோற் றோன்றியதாகவும், உருமேறு இடித்தலால் எழுந்த ஓசை குறவர் சாரலெல்லாஞ் சிலம்பியது அங்ஙனந் தீதாகக் கருதின அயலார்கூற்றைக் கேட்டதாய் கழறியகூற்றுப் பரந்ததாகவும், சிறுகுடி துயிலெழுந்தது காவன் மிகுதியாற் றலைவியுந் தானுங் களவு இடையீடுபட்டு வருந்தித் துயிலின்றியிருந்த தன்மையாகவும் உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப்போலி.
(ஊ) “பாம்பின் பையுடை யிருந்தலை துமிக்கு மேற்றொடு” (எ) “கடிதிடி யுருமிற் பாம்பு பையவிந்,திடியொடு மயங்கி யினிதுவீழ்ந் தன்றே” குறுந், 158, 190, 268, 391, .(ஏ) “மழை தவழும் பெருங்குன்றத்துச்,செயிருடைய வரவெறிந்து,கடுஞ்சினத்த மிடறபுக்கும்,பெருஞ்சினப்புய லேறனையை” பதிற். 51 : 25 - 8.(ஐ) “உருமுச் சிவந் தெறிந்த வுரனழி பாம்பின்” (ஒ) “பாம்பின், பைபட விடிக்குங் கடுங்குர லேற்றொடு” அகம். 92 : 11, 323 : 10 - 11. (ஓ) “கடுவொடுங் கெயிற்ற வரவுத்தலை பனிப்ப, விடியென முழங்கும்” (ஒள) “நஞ்சுடை வாலெயிற் றைந்தலை சுமந்த, வேக வெந்திற னாகம் புக்கென, விசும்புதீப் பிறப்பத் திருகிப் பசுங்கொடிப், பெருமலை விடரகத் துருமெறிந் தாங்கு” (ஃ) “இளைய தாயினுங் கிளையரா வெறியு, மருநரை யுருமின்” (அஅ) “அரவெறி யுருமின் முரசெழுந் தியம்ப” (ஆஆ) “அரவெறி யுருமி னுரறுபு சிலைப்ப” புறம். 17 : 38 - 9, 37 : 1 - 4, 58 : 6 - 7, 126 : 19, 366 : 3. (இஇ) “விரிநிற நாகம் விடருளதேனு,முருமின் கடுஞ்சினஞ்சேணின் றுமுட்கும்” நாலடி. 164. (ஈஈ) “ஏறோ, டருமணி நாக மனுங்கச் செருமன்னர், சேனை போற் செல்லு மழை” கார். 20. (உஉ) “நிரைகதிர் நீளெஃக நீட்டி வயவர்,வரைபுரை யானைக்கை நூற - வரைமே, லுருமெறி பாம்பிற் புரளும்”(ஊஊ) “யானை புண்கூர்ந்துருமெறி பாம்பிற் புரளும்” கள. 13, 38.(எஎ) “அதிர்குர லேறோ டலைகடன் மாந்தி, முதிர்மணி நாக மனுங்க முழங்கிக்,கதிர்மறை மாலை கனைபெய றாழ” திணைமொழி. 28. (ஏஏ) “இடியே றுண்ட நாகம் போலக், கொடியேர் சாயற் கொழுங்கவின் வாட” பெருங். (2) 10 : 112 - 3. (பிரதிபேதம்) 1 நாறிய.
|