8 | (1) கால்பொர 1நுடங்கல கறங்கிசை யருவி (2) நின் மால்வரை மலிசுனை மலரேய்க்கு மென்பதோ (3) புல்லாராப் புணர்ச்சியாற் புலம்பிய வென்றோழி (4) பல்லிதழ் மலருண் (5) கண் பசப்பநீ சிதைத்ததை |
எ - து: முயங்குதலமையாத கூட்டம்பெறாமையால் வருந்தின என் றோழியுடைய பல இதழையுடைய மலர்போலும் உண்கண்கள் பசக்கும்படி நீ கெடுத்தது காற்றடிக்கவுந் தன் பெருமையால் (6) அசையாவாய் நின்று ஒலிக்கின்ற ஓசையினையுடைய அருவிகளையுடைய நினது பெருமையையுடைய வரையில் நீர்நிறைந்த சுனையின் மலரையொக்குமென்னும் பொறாமையோ ? 2அதுவன்றேல் அருளின்மையன்றோ? எ - று. 12 | புகர்முகக் (7) களிறொடு புலிபொரு துழக்கு (8) நின் னகன் (9) மலை யடுக்கத்த வமையேய்க்கு மென்பதோ |
1. (அ) “கால்பொர,,,,,,நீசிதைத்ததை” என்னும் பகுதியை, இதுபாடாண் டிணைப்பகுதியாகியசுட்டியொருவர் பெயர் கொள்ளாக்கைக்கிளையன்றோ வென வினாவி, தலைவன் அன்பின்மை மெய்யாயின் அஃதாம் ; இஃது அவ்வாறின்றி வரைவுகடாதல் காரணமாக அன்பிலனென்று இல்லது கூறினமையின் ஒருதலையன்பாகாதென்று விளக்கினர், பேராசிரியர் ; (ஆ) நச்சினார்க்கினியரும் இதையே தழுவினர் ; தொல். செய். சூ. 160. 2. “கூடற் குடவயின்..........கண்போன் மலர்ந்த காமர் சுனைமலர்” முருகு. 71 - 75. 3. “புணர்ச்சியுட் புல்லாரா மாத்திரை” கலி. 142 : 1. 4. “பல்லித ழுண்கண் பசத்தல்“ ஐங். 170. 5. கண் பசத்தல் ஐங். 21, 34, 36, 37, 45, 169, 242, 264, 477, 500; கலி. 77: 12, 82, 20, தொல். எச்ச. சூ. 67 -இல் “சொல்வரைந் தறியப் பிரித்தனர் காட்டல்” என்பதன் விசேடவுரையில், “கால்பொர நுடங்கலிற் கறங்கிசை யருவி யென்புழி, நுடங்குதலையுடைய அருவியென நிற்குமாறு உணர்க. இவைபோல்வன ஓசை வேற்றுமையான் வேறுபடுவனவும் உணர்ந்துகொள்க” என இவருரையிற் காணப்படுவது இங்கே அறிதற்பாலது. 7. மலையில் யானையும் புலியும் பொருமென்பதை கலி. 48 : 6 - 7-ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்பாலும் உணர்க. 8. (அ) “தோளும்.......திண்டேர்ச் செழியன் பொருப்பிற் கவாஅ, னல்லெழி னெடுவேய் புரையுந், தொல்கவின் றெலைந்தன”அகம் 137 : 12 - 6. (ஆ) புண்ணிய நெடுவரை.........கழை” சிலப். 3 : 97. 9. (அ) ”பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடும்” சிலப். 11 : 19 - 20 (ஆ) “ஓங்குமலையடுக்கம் பாய்ந்து” (பிரதிபேதம்) 1 நுடங்கலா, நுடங்கலிற, 2 அதுவன்றே யருளின.
|