பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி277

கடையெனக் 1கலுழுநோய் கைம்மிக வென்றோழி
(1) தடையின திரண்டதோ டகைவாடச் சிதைத்ததை

எ - து: உயிர்போம் பருவமென்று கூறும்படியாகக் கலங்குதற்கு ஏதுவாகிய காமநோயைக் கடக்கும்படியாக என் தோழியுடைய பெருத்தன வாகிய திரண்டதோள்களை அழகுவாடும்படி நீ கெடுத்தது புகரையுடைத்தாகிய முகத்தையுடைய களிற்றோடே புலி 2பொருது துகைத்துத் திரியும் நின்னுடைய அகன்ற மலையில் அடுக்கத்தனவாகிய மூங்கிலையொக்குமென்னும் பொறாமையோ ? அதுவன்றேல் அருளின்மையன்றோ ? எ - று.

16 (2) சுடருற வுறநீண்ட சுரும்பிமி ரடுக்கத்த
விடர்வரை (3) யெரிவேங்கை யினரேய்க்கு மென்பதோ
(4) யாமத்துந் 3துயிலல ளலமரு மென்றோழி
(5) காமரு நல்லெழில் கவின்வாடச் சிதைத்ததை

எ - து: நடுயாமத்துந் துயில் கொள்ளுத லிலளாய் மனந் தடுமாறும் என் தோழியுடைய விருப்பம் மருவிய நல்ல 4எழுச்சியழகு வாடும்படியாக நீ கெடுத்தது ஞாயிற்றைத் தீண்டும்படியாக மிகநீண்ட சுரும்புகள் ஒலிக்கின்ற (6) முழைஞ்சுகளையுடைய மலையினது பக்க மலையிடத்தனவாகிய எரிபோலும் வேங்கையினது பூங்கொத்தை யொக்குமென்னும் பொறாமையோ ? 5அது வன்றேல் அருளின்மையன்றோ ? எ - று.


1. (அ) "வீங்கிறைத் தடைஇய வமைமருள் பணைத்தோள்” பதிற். 54 : 3. (ஆ) “தடைஇய மென்றோளாய்” கலி. 93 : 5. (இ) “தடைஇய” அகம். 323 : 8.

2. “வெங்க திர்க்கட வுள்வியன் றேர்வரைத், தங்கு சந்தனக் கோட் டிடைப் பட்டென” சீவக. 1607.

3. இந்நூற்பக்கம் 267 : 3 - ஆம் குறிப்புப் பார்க்க.

4. (அ) “யாமம் - இடையிரவு ; நாற். சூ. 12 : (ஆ) "ஊர் துஞ்சியாமமும்” குறுந். 32. (இ) "யாம நடுநாட் டுயில்கொண் டொளித்த, காமநோயின்” (ஈ) “பலர்த்துயிற்றும் யாமநீதுஞ்சலைமன்” கலி. 122 : 21 - 2 ; 146 : 36 - 7. (உ) “தீய வனமுந் துயின்று திசைதுயின்று, பேயுந் துயின்றதாற் பேர் யாம - நீயுமினிக், கண்மேற் றுயில்கை கடன்” நள. கலி தொடர். 94.

5. (அ) ”காமனும் விழையுங் காமர் காரிகைக், கலையுணர் மகளிர்” (ஆ) ”கண்டுகண் ணோராக் காமர்காரிகை,
வண்டுளரைம்பால் வாசவதத்தை” பெருங். (1) 40: 183 - 4, 234 - 5.

6. முழைஞ்சு - குகை.

(பிரதிபேதம்) 1கலிழு, 2பொருதுகைத்து, 3துயிலிலள், 4எழிச்சி, 5அன்றே