| வலிமிகு வெகுளியான் வாளுற்ற மன்னரை நயனாடி நட்பாக்கும் வினைவர்போன் மறிதரு மயமிழி யருவிய வணிமலை நன்னாட; | 10 | ஏறிரங்கிருளிடை யிரவினிற் பதம்பெறாஅன் மாறினெனெனக்கூறி மனங்கொள்ளுந் தானென்ப கூடுதல் வேட்கையாற்குறிபார்த்துக் குரனொச்சிப் பாடோர்க்குஞ்செவியோடு பைதலேன் யானாக ; | 14 | அருஞ்செலலாரிடை யருளிவந் தளிபெறாஅன் வருந்தினெ னெனப்பலவாய்விடூஉந் தானென்ப நிலையுயர் கடவுட்குக்கடம்பூண்டு தன்மாட்டுப் பலசூழு மனத்தோடு பைதலேன் யானாக ; | 18 | கனைபெயனடுநாள்யான் கண்மாறக் குறிபெறாஅன் புனையிழாயென்பழி நினக்குரைக்குந் தானென்ப துளிநசைவேட்கையான் மிசைபாடும் புள்ளிற்றன் னளிநசை யார்வுற்றவன்பினேன் யானாக ; எனவாங்கு ; | 23 | கலந்தநோய்கைம்மிகக் கண்படா வென்வயிற் புலந்தாயுநீயாயிற் பொய்யானே வெல்குவை யிலங்குதா ழருவியோடணிகொண்ட நின்மலைச் சிலம்புபோற் கூறுவ கூறு மிலங்கேரெல்வளை யிவளுடை நோயே. |
இஃதுஅல்லகுறிப்பட்டுத் தலைவன் மீள அதனை என்பிழையாகக் கருதுவனெனக் கவன்று ஆற்றாளாகி, “தன்குறி தள்ளிய தெருளாக் காலை, வந்தனன் பெயர்ந்த வறுங்கள நோக்கித், தன் பிழைப்பாகத் தழிஇத் தேறிய” (1) தலைவியது நிலைமை தோழி தலைவற்குக்கூறி, இவ்விடையீடு நின் 1தோழியினாயிற்றென 2எனதுபிழைப்பாக்கி அவளை ஆற்றுவிப்பாய், நீ உரைத்ததே உரையாம் அவட்கென அவளது ஆற்றாமைகூறி வரைவுகடாயது. இதன் பொருள்.
1. தொல். களவியல். சூ. 20 (பிரதிபேதம்) 1தோழியின், 2என்பிழைப்பாக அவளை.
|