பக்கம் எண் :

280கலித்தொகை

வீயகம் புலம்ப வேட்டம் போகிய
(1) மாஅ லஞ்சிறை (2) மணிநிறத் தும்பி
வாயிழி கடாத்த வான்மருப் (3) பொருத்தலோ
டாய் (4) பொறி யுழுவை தாக்கிய பொழுதின்
5 (5)வேங்கையஞ் சினையென விறற்புலி முற்றியும்
பூம்(6) பொறியானைப் புகர்முகங் குறுகியும்
வலிமிகு வெகுளியான் (7)வாளுற்ற (8) மன்னரை

1. (அ) ”அகமுனர்ச் செவிகை வரினிடை யனகெடும்” என்பதனுரையில் செவியெனச் சகரத்தை முற்கூறியதனால், ‘அஞ்சிறைத் தும்பியென இப்பொருளில் வருதலுங் கொள்கவென்று அமைத்து அகஞ்சிறை யென்பதற்கு ஏனையவற்றின் சிறைபோலப் புறத்தின் கண்ணவன்றி அகத்தின்கண்ணவாகிய சிறையென்று பொருளும் ஏழாம்வேற்றுமைத் தொகையென்று இலக்கணமும் எழுதினர் விருத்தியுரைகாரர்; நன். மெய். சூ. 19. (ஆ) "அஞ்சிறைத்தும்பி" குறுந். 2. ஐங். 20.

2. (அ) "மணி நிறத்தும்பி" ஐங். 215. (ஆ) இந்நூற்பக்கம் 260 : 3-ஆங் குறிப்பு ஈண்டறிதற்பாலது.

3. புலி யானையொடு பொருமென்பதை கலி. 48 : 6 - 7-ம் அடிக் குறிப்பாலுணர்க.

4. (அ) பொறி - புள்ளி. (ஆ) புலிக்கு வரிகூறுதல் பெருவழக்காதல் பற்றி இவ்வாறு பொருள் கூறினர்போலும்; (இ) “புலிப்பொறிப் போர்வை” (சீவக. 266) என்புழியும் இவர் இங்ஙனம் கூறியிருக்கிறார். (ஈ) மறங்கொள் வயப்புலி.........வரியும் புள்ளியு மயங்கு வான்புறத், துரிவை” சிலப். 12 : 27 - 30 என்பதனால் புலிக்கு வரியே அன்றிப் புள்ளியும் கூறுதல் மரபென்று தெரிகிறது. (உ) “பூம்பொறியுழுவை” (ஊ) "புலிப்பொறியன்ன" நற் 104 : 1, 391 : 2; (எ) "புலிப்பொறி வேங்கை" ஐங்குறு 396 (ஏ) "பொறிகிள ருழுவை" அகம் 147 : 6. (ஐ) "பொறியெருத் தெறுழ்வலி.........புலிமானேற்றை" யா - வி. சூ. 16. மேற். (ஒ) "புள்ளிகொண்ட புலியுரி" தே. (ஓ) "பொறிப்புலித் தோலும்" பெருங். (1) 51 : 87. (ஒள) "பொறிப்புண்டரீகம் போலு மொருவனால்" (ஃ) "வெறிப்பொறிப் புலியின்" கம்ப. அங்கதன்றூது. 36, விடைகொடுத்த, 10.

5. கலி. 48 : 1 - 6 -ஆம் அடிக் குறிப்புப்பார்க்க.

6. (அ) "பல்பொறிச் சிறுகண் யானை" ஐங். 355. (ஆ) "பொறிமுகத் களிறூர்ந்து" யா - வி. சூ. 15. மேற்கோள்.

7. வாள், கொலைத்தொழிலுமாம்.

8. "பகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி, நட்பாட றேறறாதவர்" குறள் 187.