பக்கம் எண் :

290கலித்தொகை

15வாழலேன் யானென்னு நீநீப்பி னவனாயி
1னேழையரெனப்பலர் கூறுஞ்சொற் பழியாயிற்
சூழுங்கானினைப்பதொன் 2றறிகிலேன் வருந்துவல்
சூழுங்கானறுநுதா னம்முளே சூழ்குவம்

எ - து : அவன் நீ அருளாதொழியின் யான் உயிர்வாழேனென்னு மாயின், குடிப்பிறந்தார் (1) பேதையராயிருப்பரென்று நன்மக்கள் அவரைச் சிறப்பித்துச் சொல்லுஞ்சொல் நீ (2) முதுக்குறைமை பூண்டிருத்தலின் நினக்குப் பழியாயிருக்குமாயின், இந்நிலைமைக்குச் செய்யலாவதொரு காரியத்தை ஆராயுங்கால் நினைப்பதொரு காரியத்தை அறியேனாய் வருந்தாநின்றேன் ; இந்நிலைமை ஆராய்ந்துபார்க்குங்கால் நறிய நுதலினையுடையாய் ! நம்முள்ளே ஆராய்ந்து பார்ப்பேம் ; 3எ - று.

19 அவனை
(2)நாணடப் பெயர்த்த னமக்குமாங் கொல்லாது
(4)பேணினரெனப்படுதல் பெண்மையு மன்றவன்
வௌவினன் முயங்குமாத்திரம் வாவெனக்
4கூறுவென் போலக்காட்டி
மற்றவன் 5மேஎவழி மேவாய் நெஞ்சே


கனியே யிதழ்வஞ்சி கண்சொன்ன வாருயிர் கண்டுவந்தே” (இ) “கண்ணா குவைநினக் கங்குயி ராவள் கனங்கு ழையே” அம்பிகா. 70, 81, 101; (ஈ) “இங்கே யுயிரன்ன பாங்கியு நீயுமெழுந்தருளே” திருவாரூர்க். 66.
(உ) “பொருப், பிணையே யிணைக்கொங்கை யாயின்ன நாமின்ப மெய்தவுயிர்த், துணையே துணைவர நீவரு வாயிந்தச் சோலையிலே” மாறன் கோவை. 75.

1. (அ) ”நுண்ணறி வுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே”
இறை. சூ. 23. நன். பெயர். சூ. 8. மயிலை. இ - வி. சூ. 167. மே.ற் (ஆ) “பெண்ணறி வென்பது பேதைமைத்தே” சிலப். 21 : 24. (இ) “நுண்ணுணர் வுடையோர் நூலொடு பழகினும், பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே” நன். பெயர். சூ. 8. வி. மேற். (ஈ) “நுண்ணறி வுடைய ராகி நூலொடு பழகி னாலும், பெண்ணறி வென்ப தெல்லாம் பேதைமைத் தாதல்” திருவிளை. பன்றிக்குட்டிக்கு. 34. (உ) “பேதைமை யென்பது மாதர்க் கணிகலம்” (ஊ) “எண்ணற வோதி யெழுத்தறக் கற்கினும், பெண்ணறி வென்பது பெரும்பேதை மைத்தே”

2. முதுக்குறைமை யென்பதற்கு, முதுமைக்கண் உறைகின்ற நிலைமை யென்றும் பேரறிவுடைமையென்றும் பொருள் கூறுவர்.

3. “நாணடப் பெயர்த்தல்” கலி. 60 : 32.

4. “பெண்ணன்றுரைத்த னமக்காயின்” கலி. 37 : 9.

(பிரதிபேதம்)1ஏழையர், 2அறிகலேன், அறிகிலன், 3என்றாள், 4கூறுவனபோல, 5மேவழி மேவழி மேஎ நெஞ்சே, மேவாய் மேவாய் மேஏ நெஞ்சே.