பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி289

உம்மைகளெல்லாம் (1) ஐயவும்மை.

சொல்லுமென்றது (2) பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றி இளிவரல் பிறந்தது; அவன் இவ்வாறு 1 ஒழுகல் நமக்கு இளிவரலெனக்குறிப்பாற் கூறிக் குறை நயப்பித்தலின்.

9 (3)நின்னின்றி யமையலேன் யானென்னு மவனாயி
னன்னான்சொ னம்புண்டல் யார்க்குமிங் கரிதாயி
னென்னுற்ற பிறர்க்குமாங் குளகொல்லோ நறுநுதால்

எ - து: நறிய நுதலினையுடையாய்! அவன் 2நின்னையின்றி யான் உயிர் 3வாழேனென்று கூறாநிற்குமாயின், இங்ஙனம் இறந்துபடுந் தன்மையை யுடையவன் கூற்றை நம்புதலைச் செய்தல் இவ்விடத்து யாவர்க்கும் அரிதாயிருக்குமாயின், 4இந்நிலைமைக்கண் என்னைச் சேர்ந்தவருத்தங்கள் பிறர்க்கும் உளவோ? இல்லையன்றே !
எ - று.

12 அறியாய்நீ வருந்துவல் யானென்னு மவனாயிற்
றமியரே துணிகிற்றல் பெண்டிர்க்கு மரிதாயி
னளியரோ வெம்போல வீங்கிவன் வலைப்பட்டார்

எ - து: அவன் யான் வருந்துவல் நீ அதனை அறியாயோவென்று கூறி நிற்குமாயின், தமக்கு (4) உயிர்போலச்சிறந்ததோழியரோடு உசாவித்துணியாமற் றமியராயிருந்தே துணிதல் மகளிர்க்கும் அரிதாயிருக்குமாயின், இந்நிலைமைக்கண் 5இவன் வலையிலே அகப்பட்டார் சிலர் எம்மைப்போல அளிக்கத்தக்காராயிருப்பாரோ? வலியராயிருப்பரன்றோ! எ - று.


1. “ஒன், றிரப்பான்போல்..................................வண்மையு முடையன்” என்புழி உம்மை இன்னானென்று துணியாமைக்கண் வருதலின் ஐயவும்மை யென்பர், சேனாவரையரும் ; தொல். இடை. சூ. 7. சே; நச். இ - வி. நூலாரும் இவ்வாறே கூறுவர். இ - வி. சூ 256.

2. “ஒன்றிரப்பான்போ லெளிவந்துஞ் சொல்லும்” என்பது, அவன் இவ்வாறொழுகுதல் நமக்கு இளிவரவாமென்னுங் குறிப்பினாற் கூறிக் குறைநயப்பித்தமையின், பிறன்கட்டோன்றிய வருத்தம்பற்றிவந்த இளிவரலாமென்பர், பேராசிரியரும்; தொல். மெய். சூ. 6. இ - வி. நூலாரும் இதனையே பின்பற்றுவர். இ - வி. சூ. 578.

3. “இன்றி யமையேனென் றின்னவுஞ்சொல்லுவாய்” கலி. 110 : 21.

4. (அ) “நின்னாவி யன்னவள் முன்னாக வன்றி நிலையலையே” (ஆ) “நெஞ்சே, யினியேது சென்றெய்துமாறென்று நீநின்றிரங்கலென்னோ,

(பிரதிபேதம்) 1ஒழுகைநமக்கு, 2நின்னையன்றி, 3வாழ்வதிலனென்று, வாழலே னென்று, 4அந்நிலைமைக்கண், 5அவன் வலையிலே.