எ - து: விளங்குகின்ற இழையினையுடையாய் ! என்னிடத்து ஒருகாரியத்தை (1) இரந்துநிற்பான்போலே தன்னைப்பிறரால் இகழப்பட்டு எளியராந் தன்மை 1தோன்றியுஞ் சிலமொழி கூறும். அங்ஙனங் 2குறையிரந்து நிற்பினும் உலகத்தையெல்லாம் பாதுகாப்பான்போலே இருப்பதொரு வலியுமுடையன், மெய்ப்பொருள் கூறும் நூல்களைக் கூறு வல்லவர்களை வழிபட்டு நின்று அப்பொருளை (2) அறிந்தான்போலே நன்மக்களைக் கண்டாற்றோன்றும் மன அடக்கமுமுடையன், வறியோர் வறுமையைக் கொடையினாலே போக்க வல்லான்போலே இருப்பதொரு வலியுமுடையன், அத்தன்மையையுடையான். ஒரு தலைவன் தனக்குரிய ஆளுந் தகைமையைக் கைவிட்டு என்னைநோக்கிக் கூறும் (3) பலகாரியங்களும் மாட்சிமைப்படுஞ் சொல்லைக் கேட்பாயாக ; எ - று. “மனைவி யுயர்வுங் கிழவோன் பணிவு, நினையுங்காலைப் புலவியு ளுரிய” (4) என்பதனுள், நினையுங்காலை 3என்றதனாற் றோழியுயர்வுங் கிழவோன் பணிவும் 4கொள்கவென்றலால், தோழி இங்ஙனங் கூறினாள். “உயர்மொழிக் கிளவியு முரியவா லவட்கே” (5) என்பதனால் ‘உலகம், புரப்பான் போல்வதோர் மதுகையு முடையன்’ என்றாள்.
னொருவன் ................................ சுடரிழாய்” என்பதை மேற்கோள்காட்டி,“இது பெரியோன் சிறு தொழில் கூறலின் வியப்பாயிற்று” என்பர். பே ; தொல். மெய்ப். சூ. 7; இ - வி. நூலாரும் இதனையேபின்பற்றுவர். இ - வி. சூ. 578. 1. இந்நூற்பக்கம் 53 : 1 - ஆம் குறிப்பிலுள்ள, இரப்பாரைப் பிற ரிகழ்வா ரென்னும் பொருளையுடைய செய்யுட்கள் இங்கே அறிதற்பாலன. 2. “கற்றறிந்தார் கண்ட தடக்கம்”. 3. பன்மாணென்பது, பலகாலென்னும் பொருளில் பரி. 2 : 73, 8 : 85, 13: 62; கலி. 92 : 56, 144: 2. 146 : 24, அகம். 49 : 9. 150 : 4; புறம். 960 : 18, 365: 9. இவற்றில் வந்துள்ளது. இவ்வுரைகாரரும் “மா[னு](ணு)ம்” என்னும் இடைச்சொல், ‘படியும்’ என்னும் பொருட்டாய் நிற்றற்கு “சுடரிழாய் பன்மா [னு](ணு)ம்” என்பதை, தொல். எச்ச. சூ. 67 - இல் மேற்கோள்காட்டியிருக்கிறார். இதனைத் தாழிசையோடு சேர்த்தால் இப்பொருள் பொருந்தும். பதிற். 83 : 6 -இல் பன்மாவென்பது இப்பொருளில் வந்துள்ளது. 4. தொல். பொருளி. சூ. 33. இதனுரையிலும். “ஒன்றிரப்பான்போல் ............................. பன்மாணும்” என்பதனை, கற்பினுள். புலவிக்காலத்துத் தலைவன் இரந்துரைக்கத் தலைவி அதனை யேற்றுக்கொண்டதற்கு மேற்கோள் காட்டியுள்ளார் இவ்வுரையாசிரியர். 5. தொல். பொருளி. சூ. 46. இதனுரையிலும், “உலகம்...................................முடையன்” என்பது, தோழி தலைவனை உயர்த்திக் கூறியதற்கு இவ்வுரையாசிரியரால் மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. (பிரதிபேதம்) 1தோன்றவும், 2குரைந்து நிற்பினும், 3என்பதனால், 4கொள்ளப்படுதலால்
|