பக்கம் எண் :

292கலித்தொகை

12இனையிரு ளிதுவென வேங்கிநின் வரனசைஇ
நினைதுய ருழப்பவள் பாடில்கட் பழியுண்டோ
வினையளென் றெடுத்தரற்று மயன்முன்னர் நின்சுனைக்
கனைபெய னீலம்போற் கண்பனி கலுழ்பவால் ;
16பன்னாளும் படரடப் பசலையா லுணப்பட்டாள்
பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ
வின்னுரைச் செதும்பரற்றுஞ் செவ்வியு ணின்சோலை
மின்னுகு தளிரன்ன மெலிவுவந் துரைப்பதால் ;
எனவாங்கு ;
21பின்னீதல் வேண்டுநீ பிரிந்தோணட் பெனநீவிப்
பூங்கண் படுதலு மஞ்சுவ றாங்கிய
வருந்துய ரவலந் தூக்கின்
மருங்கறி வாரா மலையினும் பெரிதே.

இது வரையாது வந்து ஒழுகுந் தலைவற்குத் தோழி தலைவியாற்றாமையும் இவ்வொழுக்கம் புறத்தார் அறியப்படுகின்றமையும் கூறி வரைவு கடாயது.

இதன் பொருள்.

(1)்ஆமிழி (2) யணிமலை (3) யலர்வேங்கைத் தகைபோலத்
தேமூசு நனைகவுட்டிசைகாவல் கொளற்கொத்த
வாய்நில்லா (4)வலிமுன்பின் (5) வண்டூது புகர்முகப்
படுமழை யடுக்கத்த மாவிசும் போங்கிய
கடிமரத்துருத்திய (6) கமழ்கடாந் திகழ்தரும


1. ஆம் - நீர். ஐங்குறு. 223.

2. நீர்வீழ்ச்சி, மலைக்கு அழகுசெய்யு மென்பதனை, கலி. 103 : 10 - 11. ஆம் அடிகளாலும் அவற்றின் குறிப்பாலும் உணர்க.

3. (அ) "தும்பி..................வேங்கையஞ் சினையென..............பூம்பொறியானைப் புகர்முகங் குறுகியும்" கலி. 49 : 2 - 4. (ஆ) "போதி யென்றான் பூத்த மரம்போற் புண்ணாற் பொலிகின்றான்" கம்ப. சம்பு. 43.

4. "வலிமுன்பின்" கலி. 4 : 1.

5. வண்டு யானை மதத்தில் மொய்க்குமென்பது "வரிவண், டோங்குய ரெழில்யானைக் கனைகடாங் கமழ்நாற்றமாங்கவை விருந்தாற்றப் பகலல்கி" கலி. 66 : 2 - 4. என்னும் பகுதியாலும் அதன் குறிப்பாலும் உணரலாகும்.

6. இந்நூற்பக்கம் 119 3- ஆங்குறிப்புப் பார்க்க.