(1) | ரெுங்களிற் றினத்தொடு வீங்கெருத் தெறுழ்முன்பி | (2) | னிரும்புலி மயக்குற்ற விகன்மலை நன்னாட |
எ - து: எட்டுத்திசையுங் காத்தற்றொழிலை மேற்கோடற்குப் பொருந்தின வாய்ப் பகைத்தவை எதிர்நில்லாத மிக்கவலியினையும் விளக்கத்தைத் தருகின்ற கமழ்கின்ற மதத்தான் நனைந்த கவுளினையும் நீர் வீழ்கின்ற அழகினையுடைய மலையிடத்துத் தேனினம் மொய்க்கும் பூக்களையுடைய வேங்கையினது அழகுபோல வண்டுகள் ஊதுகின்ற புகரினையுடைத்தாகிய முகத்தினையுமுடைய சொரியும் மழையையுடைத்தாகிய (3) பக்கமலையிடத்தனவும் பெருமையையுடைய விசும்பிலேவளர்ந்த மிகுதியையுடைத்தாகிய மரங்களை யுடைய ஆற்றிடைக்குறையிடத்தனவுமாகிய , பெரிய (4) யானைத்திரள்களோடே வீங்கின கழுத்தினையும் மிக்க வலியினையுமுடைய பெரியபுலி மாறுபாட்டாலே போர்செய்தலுற்ற மலையினையுடைய நல்ல நாடனே; எ - று.
1. "வேழக் குரித்தே விதந்துகளி றென்றல், கேழற் கண்ணுங் கடிவரை யின்றே" (தொல். மரபு. சூ. 34.) என்பதனாலும் "களிறுமேல் கொள்ளவும்" (புறம். 41 : 9) என்பதனாலும் அதனுரையாலும், "கோட்டு மாவூரவும்" (சிலப். 15 : 98) என்பதனுரையில் மேற்கோளான இப்பகுதியில,் களிறென்பது பன்றி யென்று தடைவிடைகளால் நிறுவப் பெற்றிருப்பதாலும் களிறென்பது பன்றியையு முணர்த்தும். அதனினீக்குதற்கு யானையை, "பெருங்களிறு" என்று கூறினார். 2. சிறுபுலி சிறுத்தையெனப்படுதலின் வேங்கையை இரும்புலி யென்றார். இதனை "வேங்கை யிரும்புலி போன்ற" களவழி. 16. என்பதனாலும் பெரும்புலி என்னும் வழக்காலு முணர்க. 3. கிரிசுரம், நதிசரம் வனசரமென யானை மூவகைப்படுமென்பர். அது (அ) "முத்திறத்தின வெண்ணலப்பிறப்பின மூரிவெங் களியானை" (ஆ) "மூவகை யானையர்" (வில்லி. சூதுபோர். 79, பதின்மூன்றாம். 6.) என வருதலாலும் அறியப்படும். அவற்றுள் இங்குக் கூறப்பெற்றன கிரிசரமும் நதிசரமுமாம். 4. யானையும் புலியும் ஒன்றோடொன்று பொரல் இயல்பு: (அ) "குரூஉப் புலி பொருத புண்கூர் யானை" மலை. 517. (ஆ) "பூம்பொறி யுழுவைப் பேழ்வா யேற்றை, தேங்கமழ் சிலம்பிற் களிற்றொடு பொரினே" (இ) "வயக்களிறு பொருத வாள்வரி வேங்கை" நற். 104 : 1 - 2; 255 : 4. (ஈ) "புகர்முகக் களிறொடு புலிபொரு துழக்குநின், னகன்மலை" (உ) "வாயிழி கடாஅத்த வான்மருப் பொருத்தலோ, டாய்பொறி யுழுவை தாக்கிய பொழுதின்" கலி. 45. 12 - 3 : 46. 3 - 4. (ஊ) "புலியொடு பொருது சினஞ்சிறந்து வலியோ, டுரவுக் களிறொதுங்கிய மருங்கு" (எ) "குயவரி யிரும்போத்துப் பொருத புண்கூர்ந்,
|