பக்கம் எண் :

294கலித்தொகை

திசைகாவல்கொளற்கொத்த என்றதனால் உலகைத் தாங்குதற்கு உரிய னென்றும் வலிமுன்பின் என்றதனான் மிக்க வலியினையுடையனென்றும் நனைகவுள் என்றதனாற் செல்வச்செருக்குடையனென்றும் வண்டூதுபுகர்முகம் என்றதனாற் பலர்க்கும் பயன்படுகின்றானென்றும் இருவகைச் சுற்றத்திற்கும் ஏற்றுக. இருவகைச்சுற்றமாவன: தலைவியுடைய தந்தைசுற்றமுந் தாய்சுற்றமுமாம். இருவகையாகிய களிற்றோடே புலிமயக்குற்ற என்றதனான் இருவகைச் சுற்றத்தாருடனே ஊரிலுள்ளார் தலைவியை அலர்கூறிப் பகைக்கின்றாரென உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப்போலி.

(8). (1) வீழ்பெயற் 1கங்குனின் விளி (2) யோர்த்த வொடுக்கத்தால்
வாழுநாட் சிறந்தவள் வருந்துதோட் டவறுண்டோ
தாழ்செறி கடுங்காப்பிற் றாய்முன்னா நின்சார
லூழுறு (3) கோடல்போ லெல்வளை யுகுபவால்

எ - து: 2தாழிட்டு அடைத்தாற் போலுங் கடிய காவலையுடைய தாய் முன்னே நின்னுடைய மலைச்சாரலிலே 3முறைமையையுற்ற கோடல் உகுமாறு போலே ஒளியினையுடைய வளைகள் உகுவனவாய் இராநின்றன; இங்ஙனமாதற்கு, இடைவிடாது வீழ்கின்ற மழையையுடைய இராக்காலத்து நின்னுடைய குறியால் அழைக்கின்ற அழைப்பினைச் (4) செவிகருவியாக ஒர்த்ததனா லுண்டான மனவொடுக்கத்தாலே உயிர்வாழ்கின்ற நாள் மிக்கவளுடைய வருந்துகின்ற தோளிடத்து அவை நினக்குச்செய்த தப்பு உண்டோ ? இல்லையே; 4எ - று.

உகுப, அகரவீற்றுப்பலவறிசொல்;படுத்தலோசையாற் பெயராய்நின்றது(?)


துயங்குபிடி தழீஇய மதனழி யானை" அகம். 291 : 6 - 7, 398 : 22-3. (ஏ) "வரிவயம் பொருத வயக்களிறு போல, வின்னு மாறாது சினனே" புறம். 100 : 7 - 8. (ஐ) "புலிகலாங் கொள்யானைப் பூங்குன்ற நாட" பழ. 157. (ஒ) "புலியொடு பொரூஉம் புகர்முக வோதையும்" சிலப். 25 : 29. (ஓ) "நீடு பணைப்பகட் டுடனே,
வல்லி யம்பொரு மாறென" வில்லி. பதினாறாம். 39.

1. தலைவன் தன்வரவு அறிவிக்குங்குறி மயங்குதலால், அல்லகுறிப்பட்ட தோழி தலைவற்குப்பிற்றைஞான்று அதனைக்கூறியதற்கு "வீழ்பெயற் .........................உகுபவால்" என்பது மேற்கோள்; தொல். கள. சூ. 42. நச்.

2. ஓர்த்தல் இந்நூற்பக்கம் 282 : 5- ஆங் குறிப்புப் பார்க்க.

3. வளையுதிர்தற்குக் கோடற்பூ உதிர்தல் உவமையாதலை, கலி. 7-ஆம் பாட்டின் 15 - 6. அடிகளின் குறிப்பாலுணர்க.

4. "நொச்சிப் பாடோர்க்குஞ் செவி" என்பதன் விசேடவுரையில் ‘நொச்சிப்பூ விழுகின்ற ஓசையை......................கருதுஞ்செவி’ என்று உரை

(பிரதிபேதம்)1கங்குலின், 2 தாளிட்டு, 3 முறைமையுற்ற, 4 என்றாள்.