பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி295

12இனையிரு ளிதுவென வேங்கிநின் வரனசைஇ
நினைதுயருழப்பவள் 1பாடில்கட் பழியுண்டோ
2வினையளென்றெடுத்தரற்று மயன்முன்னர் (1) நின்சுனைக்
கனைபெயனீலம்போற் கண்பனி கலுழ்பவால்

எ - து: இவ்வாறே ஒரு களவொழுக்கமுடையளென்று உயர்த்துக் கூப்பிடுகின்ற அயலார்முன்னே நின்னுடைய சுனையிடத்துச் செறிந்த மழையையேற்ற நீலம்போலே கண்கள் நீர் சொரிவனவாயிராநின்றன; இங்ஙனமாதற்கு இது யாம் வருந்துதற்கு ஏதுவாகிய இருளென்றேங்கி நின் வருதற்றொழிலை நச்சி நினைத்தலாலுண்டான வருத்தத்திலே வருந்துகின்றவளுடைய துயிலில்லாத கண்ணிடத்து அவை நினக்குச்செய்த பழிகளுண்டோ ? இல்லையே ; 3எ - று.

16பன்னாளும் படரடப் (2) பசலையா லுணப்பட்டாள்
(3)பொன்னுரை மணியன்ன மாமைக்கட் பழியுண்டோ
வின்னுரைச் (4)செதும்பரற்றுஞ் செவ்வியு ணின்சோலை
மின்னுகுதளிரன்ன மெலிவந் துரைப்பதால்

எ - து: நுரைகளையுடைய இனிய சின்னீர் வந்து ஆரவாரிக்கும் இளவேனிற்காலத்தே நின்னுடைய (5) சோலையில் ஒளிகெட்ட தளிரையொத்த நிறக்கேடு வந்து பலர்க்குங் கூறுவதாயிராநின்றது; இங்ஙனமாதற்குப் பலநாளும் நினைவு வருத்துகையினாலே பசலையாலே நுகரப்பட்டவளுடைய பொன்னை


யெழுதி, ‘மனத்தின் வினையைச் செவிமேல் ஏற்றினார் ; அது கருவியாக உணர்தல்நோக்கி’ என இலக்கணமும் இவ்வுரையாசிரியரே எழுதியிருத்தல் ஈண்டறிதற்பாலது; கலி. 46, 12 - 3.

1. (அ) "கூடற் குடாஅது, பல்பொறி மஞ்ஞை வெல்கொடி யுயரிய, வொடியா விழவி னெடியோன் குன்றத்து,
வண்டுபட நீடிய குண்டு சுனை நீலத், தெதிர்மலர்ப் பிணைய லன்னவிவ. ளரிமதர் மழைக்கண்" (அகம். 149 : 44 - 49) என்பதும் (ஆ) இந்நூற்பக்கம் 276 : 2 - ஆங் குறிப்பும் ஈண்டறிதற்பாலன.

2. பசலையா லுணப்படல் : கலி. 15 : 13.

3. (அ) "மணிமிடை பொன்னின் மாமை" நற். 304 : 6. (ஆ) "காசு நிழற் காட்டு மாசின் மாமை" பெருங். (1) 40 : 227.

4. (அ) "புனற்செதும்பு நின்றலைக்கும் பூங்குன்ற நாட" நாலடி. 128. (ஆ) "செதும்பற் றாமரைச் செவ்விதழ் போல" (இ) "செதும்புபரந் தெங்குஞ் சேற்றிழுக் குடைத்தாய்" (ஈ) "செருத்தற் றீம்பால் செதும்படப் பிலிற்றி"
பெருங். (1) 40 : 323; 49 : 28, 112.

5. "நீணிழற் றளிர்போல நிறனூழ்த்தல்" கலி. 20 : 17

(பிரதிபேதம்) 1 பாடிலள்கட், 2 வினையருளென், 3 என்றாள்.