பக்கம் எண் :

296கலித்தொகை

யுரைத்ததொரு மணியுண்டாயின் அதனையொத்த பசலை பலந்த 1மாமைநிறத்தின்கண் அது செய்த பழிகளுண்டோ ? இல்லையே; 2எ - று.

எனவாங்கு, 3அசை.

(21). (1) பின்னீதல் வேண்டுநீ பிரிந்தோணட் பெனநீவிப்
பூங்கண் படுதலு மஞ்சுவ றாங்கிய
(2) வருந்துய ரவலந் தூக்கின்
(3) மருங்கறி வாரா மலையினும் பெரிதே.

எ - து : அவள் அங்ஙனமான இடத்து அவள் பூப்போலுங் கண் பாடின்மையை நீவிப் படுதற்கும் யான் அஞ்சுவேன்; அதற்குக் காரணமென் னெனில், அத்துயிலிடை 4நினைத்து வருந்தத்தக்க கனவாற் பின்னர்த் தாங்கிய அரிய வருத்தத்தால் உற்ற கேட்டைத் தூக்கிப்பார்க்கில் அஃது எல்லையறிய வொண்ணாத மலையினும் பெரிதாயிராநின்றது; இனி இவ்வருத்தம் உறாதபடி நீ வரையாமற் பிரியப்பட்டாளோடு கொண்டஉறவு பின்னுதலை நீ கொடுத்தல் வேண்டும் ; 5எ - று.

"பின்னுதல் பின்னெனநின்றது. 6பின்னியதொடர் [நிலை] (நீவி)" (4) என்றார்பிறரும். துயில்கொள்ளாமையைத் 7துடைத்து என்க.

இதனால், தலைவற்கு அசைவு பிறந்தது.

இது தரவும் தாழிசையும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற ஒத்தாழிசைக்கலி. (12)

(49).கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு
நெடுவரை மருங்கிற் றுஞ்சும் யானை
நனவிற்றான் செய்தது மனத்த தாகலிற்
கனவிற் கண்டு கதுமென வெரீஇப்

1. "பின்னீதல்..................பெரிதே" என்பது துஞ்சிச்சோர்த லென்னும் மெய்ப்பாட்டிற்கு மேற்கோள்; தொல். மெய்ப். சூ. 23: பே.

2. "அருந்துய ரவல்மொடு" தொல். கள. சூ. 11. நச். மேற். ‘எண்ணியது’

3. (அ) "வரையளந் தறியாப் பொன்படு நெடுங்கோட், டிமையம்" புறம். 39 : 14 - 5. (ஆ) "மலையே; அளக்க லாகாப் பெருமையு மருமையு, மருங்ககல முடைமையு மேறற் கருமையும், பொருந்தக்கூறுப" தொல். சிறப். நச். மேற். (இ) "அகலத் தெல்லையு மாழ்ச்சிய தந்தமு, முயர்பி னோக்கமு முணர்த்தற் காகா, விஞ்சையம் பெருமலை" பெருங். (1) 51 : 6 - 8. (ஈ) "அளக்க லாகா வளவும் பொருளும்.......................மலைக்கே" நன்.

4. கலி. 15 : 18.

(பிரதிபேதம்)1 மைநிறத்தின், 2 என்றாள், 3 ஆங்கு. அசை, 4 துயரகத்தனவாற் பின்னர்த், 5 என்றாள், 6 பின்னீதொடாநிலை, 7 துடைத்து, இதனாற்றலைவற்கு