5 | புதுவதாக மலர்ந்த வேங்கையை யதுவென வுணர்ந்தத னணிநல முருக்கிப் பேணா முன்பிற்றன் சினந்தணிந் தம்மரங் காணும் பொழுதி னோக்கல் செல்லாது நாணி யிறைஞ்சு நன்மலை நன்னாட; | 10 | போதெழின் மலருண்க ணிவண்மாட்டு நீயின்ன காதலை யென்பதோ வினிதுமற் றின்னாதே மின்னோருங் கண்ணாக விடியென்னாய் பெயலென்னா யின்னதோ ராரிடை யீங்குநீ வருவதை; | 14 | இன்புற வளித்தனை யிவண்மாட்டு நீயின்ன வன்பினை யென்பதோ வினிதுமற் றின்னாதே மணங்கமழ் மார்பினை மஞ்சிவ ரடுக்கம்போழ்ந் தணங்குடை யாரிடை யீங்குநீ வருவதை; | 18 | இருளுற ழிருங்கூந்த லிவண்மாட்டு நீயின்ன வருளினை யென்பதோ வினிதுமற் றின்னாதே யொளிறுவேல் வலனேந்தி யொருவன்யா னென்னாது களிறியங் காரிடை யீங்குநீ வருவதை; அதனால்; | 23 | இரவின் வார லைய விரவுவீ யகலறை வரிக்குஞ் சாரற் பகலும் பெறுவையிவ டடமென் றோளே. |
இது 1நீரிவ்வாறு வருகின்ற வரவு எமக்குத் துன்பத்திற்குக் காரண 2மாகாநின்றதெனக் கூறி இரவுவருவானைத் தோழி பகல் 3வருகவென்றது. இதன்பொருள். (1) | கொடுவரி தாக்கி வென்ற வருத்தமொடு நெடுவரை மருங்கிற் றுஞ்சும் (2) யானை |
1. யானை புலியைக்கொல்லுமென்பது இந்நூற்பக்கம், 251 : 1-ஆங் குறிப்பால் உணரலாகும்; கொன்று மலையிற் றுயிலுமென்பதை, கலி. 42 : 1- 3-ஆம் அடிகளால் உணர்க. ‘கொடுவரி, பண்புத்தொகைப் புறத்துப்பிறந்த அன்மொழித்தொகை; ஆகுபெயருமாம்’ புறம். 135. 2. யானை வேங்கைமரத்தைச் சினங்கொண்டு சிதைக்கு மென்பதனை, (அ) "கதம்வாய் வேழ, மிருங்கேழ் வயப்புலி வெரீஇ யயலது, கருங் கால் வேங்கை யூறுபட மறலிப், பெருஞ்சினந் தணியுங் குன்ற நாட" நற். 217 : 2 - 5. (பிரதிபேதம்)1 நீஇவ்வாறு, 2ஆய்நின்றதென, 3 வாவென்றது.
|