பக்கம் எண் :

298கலித்தொகை

(1)நனவிற்றான் செய்தது மனத்த தாகலிற்
கனவிற்கண்டு கதுமென (2) 1வெரீஇப்
5 (3)புதுவ தாக (4) மலர்ந்த வேங்கையை
யதுவென 2வுணர்ந்ததனணிநல முருக்கிப்


(ஆ) "மறப்புலிக் குழூஉக்குரல் செத்து வயக்களிறு, வரைசேர் பெழுந்த சுடர்வீ வேங்கைப், பூவுடைப் பெருஞ்சினை வாங்கிப் பிளந்துதன், மாயிருஞ் சென்னி யணிபெற மிலைச்சி" பதிற். 41 : 7 - 10. (இ) "உறுபுலி யுருவேய்ப்பப் பூத்த வேங்கையைக், கறுவுகொண் டதன்முதற் குத்திய மதயானை" கலி. 38 : 6 - 7. (ஈ) "புலிக்கேழ் வேங்கைப் பூஞ்சினை புலம்ப, முதல்பாய்ந் திட்ட முழுவலி யொருத்தல்" அகம். 227 : 8 - 9. (உ) "உருமி னார்த்துடன் றெதிரெறு முழுவையோ டும்பல், பொருத முற்றொால் கனவலிற் பொருக்கென வெழுந்தங், கருகு நின்றவொள் வீயிணர் வேங்கையை யலைக்கு, மருவு வெஞ்சின மூண்டுழி வகுத்தறி யார்போல்" தணிகை. திருநாட்டு. 42. என்பவையும் வலியுறுத்தும்.

1. "நனவினா னலம்வாட நலிதந்த நடுங்கஞர், கனவினா லழிவுற்றுக் கங்குலு மாற்றாக்கால்" கலி. 53 : 18 - 9. என்பதும், "கவிர்ததை சிலம்பிற் றுஞ்சுங் கவரி, பரந்திலங் கருவியொடு நரந்தங் கனவு, மாரியர் துவன்றிய பேரிசை யிமையம்" (பதிற். 11 : 21 - 3.) என்புழி ‘அருவியொடு நரந்தங்கனவுமென்றது, அவ்வாரியரோ ணையானேபிற விலங்கானும் மக்களானும் வருத்தமின்றிப் பகற்காலத்துத் தான் நுகர்ந்த அருவியையும் நரந்தத்தையுமே கனவினுங் காணுமென்றவாறு’ என எழுதியிருக்குமுரையும் இங்கே அறிதற்பாலன.

2. யானை, தன்னைத் தாக்கும் புலிக்கு வெருவுமென்பது: "பரியது கூர்ங் கோட்ட தாயினும் யானை, வெரூஉம் புலிதாக்குறின்" குறள். 599.

3. புதுமையென்னும் பண்படியாகப்பிறந்த புதிதென்னுஞ்சொல் வழக்கிலுள்ளது. அஃதன்றியும் ‘புதுவது’ என்று வருதலை. மலை. 28 ; கலி. 22: 4. 24: 4, 69: 1, 128, 7; அகம் 25 5, 221 : 5, 352 : 16; புறம். 42 : 6, 76 : 2; சிலப். 30 : 140; சீவக. 1343; பெருங். (2) 2 : 167, 7 : 163, (4) 4 : 105; பாகவதம். (10) அக்குரூரன். 30. இவற்றில் வந்திருத்தலாலறிக. முதுமையென்னுஞ் சொல்லடியாக முதுவது என்று ஒருசொல், அருகிவருகின்றது.

4. மலர்ந்த வேங்கைமரம் புலி போற்றோன்றுமென்பது இந்நூற்பக்கம் 209 : 2, (இ - ஃ) குறிப்பால் உணரலாகும்.

(பிரதிபேதம்)1 நீஇவ்வாறு, 2 ஆய்நின்றதென, 3 வாவென்றது.