பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி299

பேணா முன்பிற்றன் (1) சினந்தணிந் தம்மரங்
காணும்பொழுதி னோக்கல் செல்லாது
(2)நாணி யிறைஞ்சு நன்மலை நன்னாட

எ - து: வளைந்தவரியினையுடைய புலி வந்து போர்செய்கையினாலே அதனை வென்ற வருத்தத்தோடே நெடிய மலையிடத்தே துயில்கொள்ளும் யானை மெய்யானகாலத்தே தான் பொருது வென்றது மனத்திடத்தேகிடக்கையாலே 1அதனைப் பொய்யான காலத்தே கண்டு கடுகவெருவி எழுந்திருந்து புதிதாக மலர்ந்துநின்ற வேங்கைமரத்தைப் புலியென்றுணர்ந்து அம்மரத்தினுடைய அழகிய நலத்தைக் கெடுத்துத் தன் வலியினாற் பேணாத சினம் மாறி அவ்வேங்கையைக் காணுங்காலத்து அதனைப்பார்த்தலைச் செய்யாமல் நாணிக் கவிழ்ந்துபோன நன்றாகிய மலைநாடனே ! எ - று.

புலியினைவென்று துயிலும் யானை அயலார்கூறிய அலரைச் சுற்றத்தார்க்குப் பொய்யெனத் தேற்றி மனைக்கட்டுயில்கின்றதலைவியாகவும், கனவிற் கண்டு வெருவினதன்மை அத்தலைவி நனவில் தான் அங்ஙனஞ் செய்த தெல்லாம் 2தன்மனத்ததாகலின் அச்செயலைக்கனவினுங் கண்டு அவள் வெருவின தன்மையாகவும், வேங்கையை நலங்கெடுத்தமை தோழி அவனது களவொழுக்கத்திற்கு உடம்பட்டுக் கொடுமைசெய்து ஒழுகுகின்றாளென்று தலைவிதோழியை வருத்தியதாகவும், அது சினந்தணிந்ததன்மை தோழிகருத்தறியாமல் அவளைக் கொடுமைகூறினேமென்று தலைவி உட்கொண்டதன்மையாகவும், அஃது அதனைநோக்காது இறைஞ்சுகின்றதன்மை யாமும் இவள் வருந்த இங்ஙனங் கூறினேமென்று எதிர்முகமாக மகிழ்ந்து நோக்காது தலைவி நாணி இறைஞ்சியிருக்கின்றதன்மையாகவும் உள்ளுறையுவமங்கொள்க. இது வினையுவமப் போலி.

10போதெழின் மலருண்க ணிவண்மாட்டு நீயின்ன
காதலையென்பதோ (3) வினிதுமற் றின்னாதே
மின்னோருங்கண்ணாக (4) விடியென்னாய் பெயலென்னா
யின்னதோராரிடை யீங்குநீ வருவதை


1. "வரிவயம் பொருத வயக்களிறு போல, வின்னு மாறாது சினனே" (புறம். 100 : 7 - 8.) என்பதனால், சினந்தணிதல் அருமையென்று இங்ஙனங் கூறினார்.

2. நாணி யிறைஞ்சுதல் குறள். 1092, 1093. பரிமேலழக ருரை.

3. "இனிதுமற் றின்னாதே" கலி. 80 : 15.

4. (அ) "நினைத்தொறுங் கலுழுமா லிவளே கங்குல்.................................களிறும், வலியிற் றப்பும் வன்கண் வெஞ்சினத்,
துருமுஞ் சூரும்............................................................ குழுமலை விடரக முடையவா லெனவே" (குறிஞ்சி. 251 - 291.)
(ஆ) "தலைமகன் இரவுக்குறி ஒழுகாநின்ற நிலைமைக்கண், ‘எம்பெருமான் வரும்வழி..................... வெண்கோட்டி யானையும்......................உருமும்...........................

(பிரதிபேதம்)1 இதனை, 2 தன்மத்ததாகியலெனச்செயலை.