எ - து: (1) அலரும் பருவத்ததாய் அழகினையுடைத்தாகிய மலர்போலும் மையுண் கண்ணினையுடைய இவளிடத்து நீ இன்றியமையாத காதலையுடையை யென்று கூறுகின்ற வார்த்தையோ இனிது; 1இஃதொழிய வழியை ஆராய்ந்து பார்க்குங் கண் மின்னாக இடியென்று கருதாயாய் மழையென்று கருதாயாய் இப்பெற்றித்தானதோர் அரிய வழியிலே இவ்விடத் தேற நீ வருகின்றநிலைமை எமக்கு இன்னாது; எ - று. 14 | இன்புற வளித்தனை யிவண் மாட்டு நீயின்ன வன்பினையென்பதோ வினிதுமற் றின்னாதே மணங்கமழ் மார்பினை (2)மஞ்சிவ ரடுக்கம்போழ்ந் (3)தணங்குடை யாரிடையீங்குநீ வருவதை |
எ - து: இவள் இன்புறும்படி அளித்தாயாகையினாலே இவளிடத்து நீ இன்றியமையாத அன்பினையுடையையென்று கூறுகின்ற வார்த்தையோ இனிது, அஃதொழிய மணம் நாறுகின்ற மார்பினையுடையைாம் மஞ்சு பரக்கின்ற பக்கமலையை ஊடறுத்து, (4) சூரரமகளிரையுடைய அரிவழியிலே இவ்விடத்தேற நீ வருகின்ற நிலைமை எமக்கு இன்னாது; எ - று.
வரையரமகளிருமுடைத்து; மற்றும் தெய்வங்கள் வௌவும்வண்ணத் தன; ஏதம் நிகழ்வதுகொல்லோ’ எனவேறுபடும்" (இறை. சூ. 29. உரை) என்பவை இத்தாழிசைகளுடன் ஒப்புநோக்கற்பாலன. 1. "காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி, மாலை மலருமிந் நோய்" குறள். 1227. என்பதனால் போதென்பதன் பொருளைத் தெளிக. 2. இந்நூற்பக்கம் 245 : 2-ஆங் குறிப்புப்பார்க்க. 3. (அ) "அணங்குடை நெடுவரை" அகம். 22 : 1. (ஆ) "அணங்குடை நெடுங்கோடு" புறம். 52 : 1. 4. (அ) "சீர்திகழ் சிலம்பகஞ் சிலம்பப் பாடிச், சூரர மகளி ராடுஞ்சோலை" முருகு. 40 - 41. (ஆ) "அருவியான்ற பெருவரை மருங்கிற், சூர்ச்சுனை துழைஇ" (இ) "அணங்குடைச் சிலம்பிற், கவிரம் பேரிய வுருகெழு கவாஅ, னேர்மலர் நிறைசுனை யுறையுஞ், சூர்மகண் மாதோ வென்னு மென்னெஞ்சே" (ஈ) "சூர்புக னனந்தலை, மாயிருங்கொல்லி" அகம். 91; 3 - 4, 198 : 14 - 7. 303 : 5 - 6. (உ) "வரையர மங்கையர் வௌவுத லஞ்சுதும் வாரலையோ" யா - வி. சூ. 76, மேற்கோள். என்பவையும் (ஊ) "சூரர மகளிரி னின்ற நீமற், றியாரை யோவெம் மணங்கியோ யுண்கென" அகம். 32 : 7 - 8. என்பதும் அதன்குறிப்பில், ‘சூரரமகளிரைப்போல வென்றான் தன்னை வருத்துதலான்’ என்று விளக்கியிருத்தலும் ஈண்டறிதற்பாலன. (பிரதிபேதம்)1 இதுவொழிய.
|