பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி301

(18). (1) இருளுற ழிருங்கூந்த லிவண்மாட்டு நீயின்ன
வருளினை யென்பதோ வினிதுமற் றின்னாதே
ஒளிறுவேல் வலனேந்தி யொருவன்யா னென்னாது
(2) களிறியங் காரிடை யீங்குநீ வருவதை

எ - து: இருளோடே மாறுபடுகின்ற கரிய கூந்தலையுடைய இவளிடத்து நீ இன்றியமையாத அருளினையுடையையென்று கூறுகின்ற வார்த்தையோ இனிது, அஃதொழிய விளங்குகின்ற (3) வேலை வலக்கையிலே எடுத்து யான் ஒருவனென்று கருதாதே யானை உலாவுகின்ற அரிய வழியிலே இவ்விடத்தேற நீ வருகின்ற நிலைமை எமக்கு இன்னாது; எ - று.

ஒருவனென்றது இவ்வுலகத்துக்குத் தலைவனென்றது.

அதனால், அசை.

(23). (4)இரவின் வார 1லைய விரவுவீ
யகலறை 2வரிக்குஞ் சாரற்
(5)பகலும் 3பெறுவையிவ டடமென் றோளே

எ - து: அவ்வின்னாமையால் எமக்குத் துன்பம் வருதலின், 4ஐயனே! இராக்காலத்து வாராதேகொள்; இவளுடைய பெருமையையுடைய மெல்லிய தோள்களை விரவிய பூக்கள் அகன்ற பாறையிலே கோலஞ்செய்யும் மலைச்சாரலிடத்தே பகற்காலத்தும் பெறுவை; 5எ - று.

இதனால், தலைவற்குச், 6சூழ்ச்சி பிறந்தது.

இது தரவிற் குறைந்த சுரிதகம்பெற்ற ஒத்தாழிசைக்கலி. (13)


1. (அ) "இருளுற ழிருங்கூந்தன் மகளிரோடு" (ஆ) "இருளுறழ் கூந்தலாள்" கலி. 122 : 12, 140 : 33.

2. (அ) "வான்றோய் வெற்ப சான்றோ யல்லையெங், காமங் கனிவ தாயினும் யாமத், திரும்புலி தொலைத்த பெருங்கை யானை, வெஞ்சின வுருமி னுரறு, மஞ்சுவரு சிறுநெறி வருத லானே" நற். 353: 7 - 11. (ஆ) "கடுங்களிறு விட்டுழிச் செல்லார்" சிறுபஞ்ச. 80.

3. "யானையோ நுங்கைவே லஞ்சுக" யா - வி. சூ. 76. மேற்.

4. "இரவின் வார லைய.................................மென்றோளே" என்பது தோழி பகற்குறி நேர்வாள்போல இரவுக்குறி விலக்கியதற்கும் (தொல். கள. சூ. 23. நச்) கிழவோன் றன்னை வாரலென்றதற்கும் (தொல். பொருளி. சூ. 16. நச்) மேற்கோள்.

5. காலமென்னு முறுப்பிற்கு, "பகலும் பெறுவையிவடடமென்றோளே" என்பதை மேற்கோள்காட்டி இஃதெதிர்காலமென்பர், பே; நச். இருவரும் ; தொல். செய். சூ. 202.

(பிரதிபேதம்) 1 ஐஇய, 2 விரிக்கும், 3.பெறுகுவை, 4. ஐயவெனஇராக், ஐயஇனிஇராக், 5. என்று இரவுவருவானைத்தோழி பகல் வாவென்றாள், 6. சூட்சி.