(50). | வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகன் மூங்கின் மிசைந்த முழந்தா ளிரும்பிடி தூங்கிலை வாழை நளிபுக்கு ஞாங்கர் வருடை மடமறி யூர்விடைத் துஞ்சு மிருடூங்கு சோலை யிலங்குநீர் வெற்ப; | 6 | அரவி்ன் பொறியு மணங்கும் புணர்ந்த வுரவுவின் மேலசைத்த கையை யொராங்கு நிரைவளை முன்கையென் றோழியை நோக்கிப் படிகிளி் பாயும் பசுங்குர லேனல் | 10 | கடிதன் மறப்பித்தா யாயி னினிநீ நெடிதுள்ள லோம்புதல் வேண்டு மிவளே பல்கோட் பலவின் பயிர்ப்புறு தீங்கனி யல்கறைக் கொண்டூ ணமலைச் சிறுகுடி நல்கூர்ந்தார் செல்வ மகள்; | 15 | நீயே, வளியி னிகன்மிகுந் தேருங் களிறுந் தளியிற் சிறந்தனை வந்த புலவர்க் களியொடு கைதூ வலை ; அதனால்; | 19 | கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங் கொடுமையிலை யாவ தறிந்து மடுப்பல் வழைவளர் சாரல் வருடை நன்மான் குழவி வளர்ப்பவர் போலப் பாராட்டி யுழையிற் பிரியிற் பிரியு மிழையணி யல்குலென் றோழியது கவினே. |
இது "புணர்ந்தபின் அவன்வயின் வணங்கற்கண்" (1) தோழி கூறியது. அது தோழியிற்கூட்டம் நிகழ்ந்தபின் முற்காலத்துப் பணிந்து பின்னின் றோனைத் தோழி தானே பணிந்தொழுகுதலாம். இதன் பொருள். | வாங்குகோ னெல்லொடு வாங்கி வருவைகன் | (2) | மூங்கின் மிசைந்த (3) முழந்தா ளிரும்பிடி |
1. தொல். கள. சூ. 23. 2. மிசைதல் தின்றலென்னும் ஒருவினைப் பொருளில் வந்ததற்கு இவ்வடி மேற்கோள். தொல். கிளவி. சூ. 46. நச். பெரும்பா. 262. 3. "முழந்தா ளிரும்பிடி" குறுந். 394.
|