பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி303

(1) தூங்கிலை வாழை 1நளிபுக்கு ஞாங்கர்
(2) வருடை மடமறி 2யூர்விடைத் துஞ்சு
(3)மிருடூங்கு சோலை யிலங்குநீர் வெற்ப

எ - து: தானே வளைகின்ற (4) மூங்கிலின்கோலை நெல்லுடனே வளைத்துத் தின்கின்ற முழந்தாளையுடைய கரிய பிடி 3அம்மலைக்கட் செறிந்த இலையினை யுடைய வாழைசெறிந்த இடத்தே 4புகுந்து, ஆங்கண் வருடைமானினது மடப்பத்தையுடைய மறிபரந்துதிரிகின்ற இடத்தே, ஞாயிறுதோன்றுகின்ற விடியற் காலத்தே, துயில்கொள்ளும் இருள்செறியுஞ் சோலையினையும் விளங்குகின்ற நீரினையுமுடைய வெற்பனே; எ - று.


1. (அ) "ததையிலை வாழை" ஐங். 460. (ஆ) "அள்ளிலை வாழை" பெருங். (1) 40 : 12.

2. வருடை, மலையில்வாழும் விலங்கு; இது: (அ) "மழையாடு சிமய மால்வரைக் கவாஅன், வரையாடு வருடை" பட்டினப். 138 - 9. (ஆ) "கருங்கலை, கடும்பாட்டு வருடையொடு தாவன வுகளும,் பெருவரை" (இ) "அவன்மலைப், போருடை வருடையும் பாயாச், சூருடை யடுக்கத்த" நற். 119 : 6 - 8. 359 : 8 - 9. (ஈ) "நெடுவரை மிசையது குறுங்கால் வருடை" ஐங்குறு. 287. (உ) "வரைவாழ் வருடைக், கோடு முற் றிளந்தகர்"அகம். 378: 6 - 7. (ஊ) "வரைபாய்வருடை" என்பவற்றாலும் அறியலாகும். இது முதுகிடத்தே காலையுடையதென நச்சினார்க்கினியர் கூறியுள்ளார். கவையடியை யுடையதென்பர் கூர்ம புராணமுடையார். இதன் குழவி மறியென்றும் கூறப்படுதல் "செவ்வரைச் சேக்கை வருடை மான்மறி" குறுந். 187. என்பதனாலு முணரலாகும். எண்கால் வருடையென்பதும் இதுவேபோலும்.

3. "வெயிலொளி யறியாத விரிமலர்த் தண்கா" (கலி. 30; 7) என்பதும் அதனடிக் குறிப்புக்களும் இங்கு ஒப்புநோக்கற்பாலன.

4. யானை மூங்கின் மிசைதல்: (அ) "நெற்கொ ணெடுவெதிர்க் கணந்த யானை" குறிஞ்சி. 35. (ஆ) "இருவெதி ரீன்ற வேற்றலைக் கொழுமுளை, சூன்முதிர் மடப்பிடி நாண்மேய லாரு, மலை" நற். 116 : 1 4-6. (இ) "பசுங்கழை தின்ற கயவாய்ப், பேதை யானைசுவைத்த, கூழை மூங்கில்" குறுந். 179. (ஈ) "மழகளிறு மிகீஇத்தன், கான்முளை மூங்கிற் கவர்கிளை" பதிற். 84 : 11- 2. (உ) "பைங்கண் யானை, முற்றா மூங்கின் முளைதரு பூட்டும்" (ஊ) "முளைமேய் பெருங்களிறு" (எ) "முளைவளர் முதல மூங்கின் முருக்கிக், கிளையொடு மேய்ந்த கேழ்கிளர் யானை" அகம். 85 : 7 - 8. 148 : 13, 332 : 1 - 2; (ஏ) "கழைதின் யானை" (ஐ) "பசித்துப்பணைமுயலும் யானைபோல" புறம். 73 : 9. 80 : 7. என்பவற்றால் அறியலாகும். இதனெல், தோரையென்றுஞ் சொல்லப்படும்.

(பிரதிபேதம்)1 நனிபுக்கு, 2ஊரிடை, 3அம்மலைக்குச், 4. புகும்வருடை.