பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி307

இவளென்றது, படர்க்கையை முன்னிலையாகக் கூறியது 1"ஊன்சோற் றமலை பாண்கடும் பருத்தும்" (1) என்றார் பிறரும்.

15 நீயே, (2) 2வளியினியன்மிகுந் தேருங் களிறுந்
தளியிற் சிறந்தனை வந்த 3புலவர்க்
களியொடு (3) கைதூ வலை
அதனால்

 

19கடுமா கடவுறூஉங் கோல்போ லெனைத்துங்
கொடுமையிலை யாவ தறிந்து (4) மடுப்பல்

 


நம்மவண் விடுநள் போலாள் கைம்மிகச், சில்சுணங்கணிந்த செறிந்து வீங் கிளமுலை, மெல்லிய லொலிவருங் கதுப்பொடு, பல்கா னோக்கு மறனில் யாயே" அகம். 32 : 5 - 6, 188 : 11 - 3, 302 : 10 - 15. (எஎ) "சூழ்கிளி சுமக்கலாற்றா மாலையந் தினைகள் காய்க்கும் வண்புனம்" சீவக. 1232. (ஏஏ) "வேயோங்கு சாரல் விளைபுனங் காவல்கொண், டாயோ வெனமொழியு மம்மழலை யின்னிசையாற், போயோங்கு பூஞ்சோலை வாழும் புனக்கிளிகண், மாயோண் மடந்தைமார் கூவி மகிழ்விப்பார்" சூளா. சுயம்வர. 104. (ஐஐ) "தட்டை குளிர்தழலைத் தாங்கித் தினைப்புனத்தைக், கிட்ட லுறாவண்ணங் கிளிமுதற் புள் ளோட்டினளே" கந்த. வள்ளி. 52.

1. புறம். 33 : 14.

2. "கால் கிளர்ந்தன்ன வூர்தி" (பதிற். ‘இருங்கண்’) (ஆ) "காலுறழ் கடுந் திண்டேர்" (கலி. 33 : 31.) (இ) "காலிய னெடுந்தேர்" (தமிழ்நெறி. மேற்கோள்.) எனவும். (ஈ) கால்கிளர்ந் தன்ன வேழம்" (முருகு. 82.) (உ) "காற்றி னிமிர்ந்த செலவிற்றாய்............................களிறு" (முத்தொள்.) (ஊ) "காற்றென.................தோன்றிய தடலருங் கடாக்களிறு" 
(எ) "காற்றெனக்.................................குஞ்சரங் கொண்டுபுக் கானரோ" (சீவக. 973. 1837) (ஏ) "காற்றன்றேற் கடுமை யென்னாம்.................. மத்த யானை" (கம்ப. அதிகாயன் 216.) (ஐ) "பாகன், காற்றென...................................... தூண்டினன் குவலயா பீடம்" (பாகவதம். (10) கஞ்சனைக்கொன்ற. (14) எனவும் தேருக்கும் யானைக்கும் வளி உவமையாய்வருதல் காண்க.

3. (அ) "விருந்தொடு கைதூவா வெம்மையு முள்ளாய்" (ஆ) "ஊணொலி யரவமொடு கைதூவாளே" (இ) "கள்விலை யாட்டியுங் கைதூ வாளே" (ஈ) "கருமஞ் செயவொருவன் கைதூவே னென்னும், பெருமையிற் பீடுடையதில்"  (உ) "கரும மறுத்த கைதூ வமையத்து."

4. "முந்தி" என்பதற்குக் கொடுப்பவும் அடுப்பவுமின்றித் தானே முற்பட்டு என்று எழுதியிருக்கும்; அரும்பதவுரைக் குறிப்பு ஈண்டறிதற்பாலது. சிலப். 21 : 31.

(பிரதிபேதம்)1 ஊண்சோற்றமலை, 2 வளியினிகன், 3 புலவற்கு.