பக்கம் எண் :

308கலித்தொகை

(1)வழைவளர் சாரல் 1வருடை நன்மான்
குழவிவளர்ப்பவர் போலப் பாராட்டி
யுழையிற் பிரியிற் பிரியு
மிழையணியல்குலென் றோழியது கவினே.

எ - து: நீ காற்றினுங்காட்டிற் 2போதற் றொழிலிலே மிக்குச்செல்லுந் (2) தேரையுங் களிற்றையும் நின்பால்வந்த புலவர்க்குக் கொடுத்தலாற்கை யொழிந்திருத்தலிலையாய் (3) மழையினும் அருள்சிறந்தாய்; ஆகையினாலேயானும் சுரபுன்னை வளர்ந்த மலைச்சாரலிற் றிரியும் வருடையாகிய நல்ல மானின் மறியை வளர்ப்பாரைப் போலே 3முன்னர் நீங்காமற் பாராட்டி, அவளிடத்து நின்றும் பிரிவையாயின் மேகலையணிந்த அல்குலையுடைய என்றோழியது கவினும் நீங்கும்; அதற்காகக், கடிதாகிய மாவைப் பின்னுங்கடிதாகச் செலுத்துந் 4தாற்றுக்கோல்போலே சிறிதுங் கொடுமையையுடையையல்லையாந் தன்மை அறிந்திருந்தும் அவளை நின்னிடத்தே சேர்த்துவேன்; 5எ - று.

இதனால், தலைவற்குப் புணர்ச்சியுவகை பிறந்தது.

இது 6தரவும் வெண்பாட்டொன்றும் அதன் பின்னர் ஐஞ்சீர் அடுக்கிய குறுவெண்பாட்டொன்றும் தனிச்சொல்லும் சுரிதகமும் பெற்ற கலிவெண்பாட்டு. (14)


1. "வழையமை நறுஞ்சாரல்" கலி. 53: 1. என்பதும் அதன்குறிப்பும் பார்க்க.

2. பரிசிலர்க்குத் தேரும் யானையுங் கொடுத்தல் மரபென்பது (அ) "உயர்மருப்பியானை..........................பரிசிலர்க் கீய,
வுரவு வேற்காளையுங் கைதூ வானே" புறம். 334. (ஆ) "சிறுகண் யானையொடு பெருந்தே ரெய்தி யாமவ ணின்றும் வருதும்" சிறுபாண். 142 - 3. (இ) "நாளீண்டிய நல்லகவர்க்குத், தேரோடு மாசிதறி" மது. 223 - 4. (ஈ) "களிறுந் தேரும், வயிரியர் கண்ணுளர்க் கோம்பாது வீசி" (உ) "களிறு கலிமான் றேரொடு சுரந்து, நன்கல னீயு நகைசா லிருக்கை" பதிற். 20 : 15 - 6. ‘வந்தனென்’ (ஊ) "தேரோ டொளிறுமருப் பேந்திய செம்மற், களிறின்று பெயரல பரிசிலர் கடும்பே" (எ) "காணிய சென்ற விரவன்மாக்கள், களிறொடு நெடுந்தேர் வேண்டினுங் கடவ" புறம். 205 : 12 - 14. 313 : 3 - 4. என்பவைகளா லறியலாகும்.

3. (அ) "மாரி பொய்க்குவ தாயினுஞ் சேர லாதன் பொய்யல னசையே" பதிற். 18 : 11 - 2. (ஆ) "புரவெதிர்ந்து, வான நாண வரையாது சென்றோர்க் கானா தீயுங் கவிகை வண்மைக், கடுமான் கோதை"

(பிரதிபேதம்)1 வரிவளை நன்மான், 2போர்த்தொழிலிலே, 3 முன்நீநீங்காமற் பாராட்டிய அவனிடத்து, 4 தாறுகோல், 5எனத்தோழி பணிந்துகூறினாள், 6தரவுவெண்பாட்டு மைஞ்சீரடுக்கிய குறுவெண்பாட்டு.