பக்கம் எண் :

310கலித்தொகை

5ளன்னையும் யானு மிருந்தேமா 1வில்லிரே
(1) யுண்ணுநீர் வேட்டே னெனவந்தாற் கன்னை
யடர்பொற் சிரகத்தால் (2) வாக்கிச் சுடரிழா
யுண்ணுநீ ரூட்டிவா வென்றா ளெனயானுந்
தன்னை யறியாது சென்றேன்மற் றென்னை
(10). (3) வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்
டன்னா யிவனொருவன் செய்ததுகா 2ணென்றேனா
வன்னை யலறிப் படர்தரத் தன்னையா
னுண்ணுநீர் விக்கினா 3னென்றேனா வன்னையுந்
தன்னைப் புறம்பழித்து நீவமற் றென்னைக்

பொருளும், அகமாகிய பட்டியென இலக்கணவியைபும், பட்டி போன்று வேண்டியவாறேயொழுகலின் பட்டியென்றாரென விளக்கமுமெழுதி "நோதக்க செய்யுஞ் சிறுபட்டி" என்பதனை மேற்கோள் காட்டினர் பரிமேலழகர். (ஆ) "சிறுபட்டி" (கலி. 84 : 20) (இ) "திருந்திய காவலர் தீரப் பட்டியாய், முருந்திள முறுவல்வே சையரின் முன்னிநீ, யருந்தன மனைத்தையு மழிவு செய்தனை" விநாயக. சோமகாந்தன்றீவினைப். 8.

1. (அ) உண்ணல் பொதுவினை யென்பதற்கு "உண்ணுநீர் வேடடேனென வந்தாற்கு" என்னும் பகுதி மேற்கோள். (தொல். கிளவி. சூ. 45. ‘எண்ணுங்’ தெய்.) (ஆ) "உண்ணுநீர் வேட்டசைந்தே னெனவுரைப்ப" சீவக. 15, 92.

2. வாக்குதல் - வார்த்தல் : (அ) "வாக்கவுக்க தேக்கட்டேறல்" புறம். 115 : 3. (ஆ) "வடியுறு தீந்தேறல் வாக்கு" பு. வெ. வெட்சி. 19. (இ) "மணிவள்ள நிறையவாக்கி, யின்மதுப்பலியும்..............................ஏந்தி" சீவக. 471. (ஈ) "சீருணத் தசும்ப ரொன்றில், வாக்கிய வுலைப்பெய் தேற்றி மரபில்வா லரியுள் ளிட்டான்" கந்த. வில்வலன்வாதாவி வதை. 13.

3. (அ) "இடைநெடுந் தெருவிற் கதுமெனக் கண்டென், பொற்றொடி முன்கை பற்றின னாக, வன்னா யென்றனெ னவன்கைவிட் டனனே, தொன்னசை சாலாமை நன்னன் பறம்பிற், சிறுகா ரோடன் பயினொடு சேர்த்திய, கற்போ னாவினே னாகி மற்றது, செப்பலென் மன்னால் யாய்க்கே" அகம். 356 : 5 - 11. (ஆ) தலைவி நாணும் மடனும் நீங்கிய சொல்லைத் தோழிக்குக் கூற்றாற் கூறியதற்கு "வளைமுன்கை பற்றி நலியத் தெருமந்திட்டு" என்பது மேற்கோள். தொல். களவி. 19. நச்.

(பிரதிபேதம்)1இல்லிலே, 2 என்றேனுக்கன்னை, 3என்றேனாலன்னையும்.