பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி311

(15) 1கடைக்கணாற் கொல்வான்போ னோக்கி நகைக்கூட்டஞ
(1)செய்தானக் 2கள்வன் மகன்.

இது "புகாஅக் காலைப் புக்கெதிர்ப் பட்டுழிப், பகாஅ விருந்தின் பகுதிக்கண்" (2) தலைவி தோழிக்குக் கூறியது.

இதன் பொருள்.

ஒளிபொருந்தின வளையினையுடையாய்! ஈதொன்றைக் கேளாய், தெருவிடத்துநாம் (3) உண்டிகளை ஆடும்மணலாற் செய்த சிற்றிலைக் காலால் அழித்துக் கூந்தலிலே அடைவித்த கோதையை அறுத்து வரியினையுடைய பந்தை எடுத்துக்கொண்டு ஓடி நாம் நோவத்தக்க தொழில்களைச் செய்யுஞ் சிறியனாகிய காவலில்லாதவன் முன்னொரு நாளிலே, அன்னையும் யானுஞ் சேர இருந்த அளவிலே, இல்லில் உறைகின்றவர்களே! உண்ணப்படுந் தண்ணீரை வேட்டேனெனச் சொல்லி வந்தவனுக்கு, அன்னை விளங்குகின்ற பூணினை யுடையாய்! உண்ணுநீரைத் தகட்டுப்பொன்னாற் செய்த கரகத்தாலே வார்த்து உண்ணப்பண்ணுவித்து வாவென்று சொன்னாள்; என்று சொல்கையினாலே யானும் சிறுபட்டியாயிருக்கின்ற தன்னை அறியாதே சென்றேன்; சென்ற பின்னை அவன் என்னுடைய வளையணிந்த முன்கையைப் பிடித்து என்னை நலிகையினாலே 3அலமந்து, தாயே! இவனொருவன் செய்ததோர் செயலைப் பாராயென்றேனாக; அத்தாயும் கூப்பிட்டு ஓடிவருதலைச் செய்ய, அதனை மறைத்து 4அங்ஙனஞ் செய்ததனை யான் உண்ணுநீர் விக்கி வருந்தினான்காணென்று ஓர் பொய்யைக் கூறினேனாக, அத்தாயும் தன்னைமுதுகைப் பலகால் அழித்தழித்துத் தடவப் பின்னை என்னைத் தன் கடைக்கண்ணாலே கொல்வான்போலே பார்த்துத் தன் மனமகிழ்ச்சியைத் தருங் கூட்டத்தை அக்கள்வனாகியமகன் செய்தான்; இதுகாண் நிகழ்ந்தது; 5எ - று.

இதனைக் கேட்டுழித் தலைவி இருவகைக் குறியும் பிழைத்தலின், "காணாவகையிற் பொழுதுநனி 6யிகப்பினுந், தானகம்புகாஅன் பெயர்தலின்மையிற்,


1. வெண்கலியுள் இறுதிக்கண் முச்சீரடி வருமென்பதற்கு, "செய்தானக் கள்வன் மகன்" என்பது மேற்கோள். (தொல். செய். சூ. 70. பே.)

2. தொல். கள. சூ. 16. இப்பகுதியுரையிலும் இவ்வுரையாசிரியரால் இச்செய்யுள் இவ்விஷயத்திற்கு மேற்கோளாகக் காட்டப்பெற்றிருக்கிறது.

3. (அ) "திருந்தாத விளங்குதலை யாயமொடு புறம்போந்து, சிறார்க்குச் சிற்றில், விருந்தாக மணற்சிறுசோ றட்டும்" திருவிளை. தடாதகை. 32. (ஆ) "பார்வார் மணற்சோ றொளித்தினிது படைப்பே மடிகட் கது குறவர், பாவை படைத்த மாவாமோ" திருவிடைக்கழிமுருகர். சிற்றிற். 10. (இ) "அடுமணற்சோ றையவுண்கவென" அம்பல. சிற்றிற். 2.

(பிரதிபேதம்)1 கடைக்கண்ணாற், 2 கள்வமகன், 3அலம் வந்து, 4அங்ஙன், 5என அவனுங் காட்சியான் வந்தமை கூறினாள், 6யிகந்துகாட்சி.