பக்கம் எண் :

320கலித்தொகை

னூரலர் தூற்றலி னொளியோடி நறுநுதல்
பீரல ரணிகொண்டு பிறைவனப் பிழவாக்கால்;
16அஞ்சலென் றகன்றுநீ யருளாது துறத்தலி
னெஞ்சழி துயரட நிறுப்பவு மியையும
னனவினா னலம்வாட நலிதந்த நடுங்கஞர்
கனவினா லழிவுற்றுக் கங்குலு மாற்றாக்கால்:
எனவாங்கு;
21 விளியாநோ யுழந்தானா வென்றோழி நின்மலை
முளிவுற வருந்திய முளைமுதிர் சிறுதினை
தளிபெறத் தகைபெற் றாங்குநின்
னளிபெற நந்துமிவ ளாய்நுதற் கவினே

இஃது ஒருவழித்தணந்து வந்த தலைவற்குத் தோழி தலைவியாற்றாமையும் ஆற்றுவித்தலதருமையுஞ் சொல்லி வரைவுகடாயது.

இதன் பொருள்.

வறனுற லறியாத (1) வழையமை நறுஞ்சாரல்
(2) விறன்மலை வியலறை (3) வீழ்பிடி யுழையதா
மறமிகு (4) வேழந்தன் மாறுகொண் மைந்தினாற்
புகர்நுதல் புண்செய்த (5) புய்கோடு போல
வுயர்முகை நறுங்காந்த ணாடோறும் புதிதீன

1. (அ) “வழையமைசாரல்” மலை. 181; (ஆ) “வரைசேர் பெழுந்த............வழையமல் வியன்காடு” பதிற். 41 : 7 - 11; (இ) “வழையம லடுக்கத்து” அகம். 328 : 1; (ஈ) “சிலம்பின் வழையொடு” புறம். 158 : 21

2. விறன்மலை: புறம். 336 : 8; நாலடி. 348. இந்நூற்பக்கம் 58 : 5-ஆம் குறிப்பு.

3. வீழ்பிடி. இந்நூற்பக்கம் 236 : 1-ஆம் குறிப்புப்பார்க்க.

4. (அ) “முரண்மிகச் சினைஇக், கொன்ற யானைக் கோடுகண் டன்ன, செம்புடைக் கொழுமுகை யவிழ்ந்த காந்தள்” (நற். 294.) என்பதும் (ஆ) ”கொடுங்கே ழிரும்புற நடுங்கக் குத்திப், புலிவிளையாடிய புலவுநாறு வேழத்தின்றலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்த” (நற்.39 : 4 - 6.) (இ) “வேல்போற் சிவந்து நெறிமுறைகோடிய வேந்தன்வெய்ய, கோல் போற் கொடியன வாங்கொலை யானையின் கோடு” (தஞ்சை. 68.) என்பவைகளும் இங்கே அறிதற்பாலன.

5. இந்நூற்பக்கம், 210 : 2-ஆம் குறிப்புப் பார்க்க.