பக்கம் எண் :

இரண்டாவது குறிஞ்சி321

வயனந்தி யணிபெற வருவியார்த் திழிதரும்
பயமழை 1தலைஇய பாடுசால் விறல்வெற்ப

எ - து: வற்கடமுறுதலை அறியாத சுரபுன்னை நெருங்கின நறிய பக்கமலையினையும் விறலினையுமுடைய மலையிடத்து அகற்சியையுடைய பாறையிடத்தே உறையுந் தான் விரும்பினபிடி தன்னிடத்தேயாகையினாலே தனக்கு (1) மாறாகிய யானையைத் தன்னெஞ்சிடத்தேகொண்ட வலியினாலே அதன்புகரை யுடைய நுதலைப் புண்ணாக்கின மறமிகுகின்ற வேழங் குத்திவாங்கின கொம்பு போல உயர்ந்தமுகையினையுடைய நறிய காந்தள் நாடோறும் 2புதுமையையுண்டாக்கப் பள்ளங்களெல்லாம் நீர் நிறைந்து அழகுபெறும்படி அருவிகள் ஆரவாரித்துக் குதித்தற்குக் காரணமான பயனைத்தரும் 3மழையையிடத்தேகொண்ட பெருமை யமைந்த வெற்றியையுடைய வெற்பனே ! எ - று.

நறியகாந்தள், குத்திவாங்கின கொடியகொம்புபோல நாடோறும் அரும்பு ஈன என்றதற்கு நற்குணமுடைய நீ வரையாதிருத்தலிற் கொடியையாய்த் தோன்றாநின்றாயென்றும், அயல் நந்தி அணிபெறும்படி 4அருவியார்த்து இழிதற்குக் காரணமான மழைதழீஇய வெற்பென்றதற்கு அயலாரிடத்தே நிலை பெறும்படி அலராகாநின்றது, நீ இங்ஙனம் வந்து செய்கின்ற தலையளியென்றும் உள்ளுறையுவமங்கொள்க. இது பயவுவமப்போலி.

போடுபோல5வென்ற ஏனையுவமம் உள்ளுறையுவமத்திற்குச் சிறப்புக் கொடுத்து உள்ளுறையுவமம் போலத் திணையுணர்தலைத் தள்ளாதாகி நின்றது.

(8). (2) மறையினின் மணந்தாங்கே 6மருவறத் துறந்தபி
னிறைவளை நெகிழ்போட வேற்பவு மொல்லும
னயலலர் தூற்றலி னாய்நல னிழந்தகண்
கயலுமிழ் நீர்போலக் கண்பனி 7கலுழாக்கால்

எ - து: 8அயலிலுள்ளார் அலர்தூற்றுகையினாலே கண்கள் 9ஆய்ந்ததன்னலத்தை இழந்தன, அவ்வளவிலே நில்லாதே பின்னர்க்கண்கள் கயல்காலுகின்ற நீர்போல நீர்விழாத காலத்துக் களவிடத்துக் கூடி அக்களவொழுக்கத்தை நிகழ்கின்றகாலத்தே 10மருவுதலறும்படி நீ அருமைசெய்தயர்த்த பின்னர்


1. “மருப்பிறக் களிறு குத்தி வயிரந்தான் கழிந்ததன்றே” “நித்தில மணி வண்டென்னு நெடுமதக்களிறுபாய முத்துடை மருப்பு வல்லே யுடைந்து” சீவக. 2275 - 6. என்பவற்றால் யானை தனக்கு மாறான யானையினுறுப்பில் தன் கோடு புக்குமுறியும்படி பொருமென்று கூறியிருப்பது இங்கே அறியத்தக்கது.

2. மறை - களவொழுக்கம். நாற்கவி. சூ. 39.

(பிரதிபேதம்)1 தழீஇய, 2புதுமையுண்டாக்க, 3மழையிடத்தே, 4ஆர்த்திழிதல், 5என வேனையுவமம், 6மருவுற, 7 கலுழ்பவால், 8அயலுள்ளார் 9ஆய்ந்த வலத்தை இழந்தன, 10மருவுதலுறும்படி.