இறையிற் கிடக்கின்ற வளைகள் நெகிழ்ந்து கழலாநிற்க அவ்வருத்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கவும் பொருந்தும், அதனாற்பெற்றதென்? 1அக்கண்கள் அதற்கு இயைகின்றனவில்லையே; எ- று. மன், ஒழியிசை. 12 | (1)இனியசெய் தகன்றுநீ யின்னாதாத் துறத்தலிற் (2)பனியிவள் படரெனப் பரவாமை யொல்லும னூரலர் தூற்றலி னொளியோடிநறு(3) நுதல் பீரல ரணிகொண்டு பிறைவனப் பிழவாக்கால் |
எ - து: ஊரிலுள்ளார் அலர்தூற்றுகையினாலே நறியநுதல் ஒளிகெட்டுப் பீர்க்கம்பூவினது அழகைத் தான் கொண்டு பிறையினது அழகை இழவாத காலத்து இயற்கைப்புணர்ச்சியிடத்துத் தெளிவகப்படுத்து இட்டுப்பிரிதலையுஞ் செய்து பின்னர் இன்னாதாம்படி நீ அருமைசெய்தயர்த்தபின்னர் இவள் வருத்தம் தெய்வத்தால் வந்ததோர் நடுக்கமென்று தெய்வத்திற்குப் பரவுக்கடன் பூணாமையும் பொருந்தும், அதனாற் பெற்றதென் ? 2அந்நறுநுதல் அதற்கு இயைகின்றதில்லையே; எ - று. அமர்ந்தென்பதும் பாடம். 16 | அஞ்சலென் றகன்றுநீ யருளாது துறத்தலி னெஞ்சழி துயரட நிறுப்பவு மியையும |
1. “இனிதுமற்றின்னாதே” கலி. 49 : 11, 15, 19; 80 : 15, 19, 23. 2. பனித்தல் - நடுங்குதல், முருகு. 303. மலை. 81, 289. 398. அகம். 5 : 21, 72 : 8; புறம.் 42 : 5, 145 : 1 சிலப் : 4 : 6, 5 : 117. 3. (அ) “பிரிந்தவர் நுதல்போலப் பீர்வீய” (ஆ) “பீரல ரணிகொண்ட பிறைநுத லல்லாக்கால்” (கலி. 31; 4. 124: 8.) (இ) “பிறைபுரை வாணுதல் பீரரும்ப” (பு - வெ. கைக்கிளைப். 5.) (ஈ) “பீரேர்வண்ணமுஞ் சிறுநுதற் பெரிதே” (யா - வி. சூ. 53. ‘மீன்றேர்ந்து‘ மேற்கோள்.) என்பவை இங்கே ஒப்புநோக்கற் பாலன; பசத்தலுக்கு பீர்க்கம்பூவை உவமைகூறுதல் மரபென்பதை, (உ) “நுண்கொடிப் பீரத்தி னூழுறுபூவெனப், பசலையூரும்” நற். 326 : 6 - 7. (ஊ) “இன்னளாயின ணன்னுத லென்றவர்.....................மாரிப்பீரத் தலர்சில கொண்டே” (குறுந். 98) (எ) “மென்றோ ளாய்கவின் மறையப், பொன்புனை பீரத்தலர்செய் தன்றே” (ஐங். 452.) (ஏ) “மாரிப்பீரத்தலர் வண்ணமடவாள்” (சிலப். 7 : 38.) (ஐ) “நறுநுதலா ணன்னலம் பீர்பூப்ப” (ஒ) “நன்னலம் பீர்பூப்ப நல்கார் விடுவதோ” பு-வெ. பெருந்திணை. இருபாற். 1, 18. என்பவையும் வலியுறுத்தும். (பிரதிபேதம்)1கண்கள் அதற்கு, 2நன்னுதலதற்கு நன்னுதலார்க்கு.
|